கோவையில் என்.ஐ.ஏ..! கார் குண்டு வெடிப்பு குற்றவாளிகளை நேரில் அழைத்து சென்று விசாரணை- பாதுகாப்பு அதிகரிப்பு

By Ajmal Khan  |  First Published Dec 25, 2022, 9:23 AM IST

கார் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரை கோவை உக்கடம் பகுதியில் உள்ள  அவர்களின் வீட்டிற்கு அழைத்து சென்று என்ஐஏ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


கோவை கார் குண்டு வெடிப்பு

கோவையில் கடந்த அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த குண்டு வெடிப்பில் ஜமேஷா முபின் என்ற நபர் உயிரிழந்தார். அவரது வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடி மருத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் உபா சட்டத்தில் கைது செய்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ போலீசார் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மேலும் குற்றவாளிகள் 6 பேரையும் கோவையில் இருந்து சென்னைக்கு அழைத்து சென்று அங்கு தனி இடத்தில் வைத்து என்ஐஏ போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

Tap to resize

Latest Videos

ஆப்ரேசன் 2024 கேம்! தொடங்கும் உதயநிதி ஸ்டாலின்.. முடிக்கும் ஜே.பி நட்டா - இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

குற்றவாளிகள் வீட்டில் என்ஐஏ விசாரணை

இந்தநிலையில் கோவை கார் குண்டு வெடிப்பின் குற்றவாளிகளான  கோவை உக்கடம் ஜி எம் நகர் பகுதியை சேர்ந்த முகமது அசாருதீன், முகம்மது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில்,  முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சல்கான் ஆகிய ஐந்து பேரையும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் கோவைக்கு அழைத்து வந்துள்ளனர். இதனையடுத்து குற்ற சம்பவங்கள் நடைபெற்ற இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

இதையும் படியுங்கள்

சாலை விபத்தில் உயிரிழந்த சபரிமலை பக்தர்கள்..! நிவாரணம் நிதி அறிவித்த முதலமைச்சர்

click me!