அந்தம்மாவ குத்தும்போது மூணு புள்ளைங்கன்னு சொல்லுச்சு... ஆனா மூணும் பொம்பள புள்ளைங்கன்னு சொல்லல, அதான் குத்திட்டேன்!! கதறும் கொலைகாரன்

By sathish kFirst Published Jul 31, 2019, 1:58 PM IST
Highlights

அந்தம்மாவுக்கு மூணும் புள்ளைகன்னு தெரியாம போச்சு, மூணும் பொம்பள புள்ளைங்கன்னு.. அப்போவே தெரிஞ்சிருந்தா பண்ணிருக்க மாட்டேன்னு கொலைகாரன் கார்த்திகேயன் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

அந்தம்மாவுக்கு மூணும் புள்ளைகன்னு தெரியாம போச்சு, மூணும் பொம்பள புள்ளைங்கன்னு.. அப்போவே தெரிஞ்சிருந்தா பண்ணிருக்க மாட்டேன்னு கொலைகாரன் கார்த்திகேயன் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதுள்ள சம்பவம் நடந்துள்ளது. 

கடந்த 23ந் தேதி நண்பகலில் நெல்லை ரெட்டியாப்பட்டியில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் உட்பட மூவரையும் கொலை செய்த கார்த்திகேயேனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் கேள்விக்கு கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல், 3 பேரையும் ஒருவனே தன்னந்தனியாக கொலை செய்ததாக கார்த்திகேயன் அளித்துள்ளார். அதில், திமுகவில் பெரிய சக்தியாக வளரவேண்டிய எனது அம்மா, மேயர் உமா மகேஸ்வரி வந்ததால் டம்மியாகக்கப்பட்டதனால் உமா மகேஸ்வரியை கொல்ல வேண்டும் என எனக்கு சின்ன வயசிலிருந்தே வெறி எனக்குள் இருந்தது. 

இந்நிலையில், ஜூலை 23-ந்தேதி  உமா மகேஸ்வரி வீட்டுக்கு  சென்றேன். என்னை பார்த்ததும் உமா மகேஸ்வரியின் கணவர் முருக சங்கரன் என்ன வி‌ஷயம் என்று கேட்டார். எனது அம்மா உங்களிடம் பேசி விட்டு வர சொன்னார் என் சொன்னதும் அவர் கதவை திறந்தார். நான் உள்ளே சென்று ஷோபாவில் அமர்ந்து அவரிடம் கொஞ்ச நேரம் பேசினேன். அப்போது உங்களால் தான் என் அம்மாவின் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது என ஆவேசமாக பேசி திட்டினேன். அப்போது வீட்டுக்குள் இருந்து உமா மகேஸ்வரி வந்து இப்படி பேசக்கூடாது வெளியே போ என்றார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உமா மகேஸ்வரியை குத்தினேன்.அப்போது ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அவரது கணவர் அதிர்ச்சியில்  கத்தியபடி என்னை பிடிக்க முயன்றார். அவரையும் கத்தியால் குத்தினேன். இதனால் அவர் உயிர் பிழைக்க படுக்கை அறைக்குள் புகுந்து கதவை மூட முயன்றார். ஆனால் நான் அவரை கீழே தள்ளி சரமாரியாக குத்தினேன். அவர் பிணமாகி விட்டார் என்று தெரிந்தது, வெளியே வந்தேன்.

அங்கு உமா மகேஸ்வரி உயிருக்கு போராடிதுடித்துக்கொண்டிருந்தார். இதனால் மீண்டும் அவரை வெறி தீரும் வரை குத்தி கொன்றேன். அதன் பின் நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்று உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உடலில் இருந்த அனைத்து நகைகளையும் வேகமாக இழுத்து அறுத்தேன். அனைத்து நகைகளையும் ஒரு பையில் போட்டு பின்னர் பீரோவை உடைத்து நகைகள்-பணம் கொள்ளை நடந்து இருப்பது போல கலைத்து போட்டேன்.

அப்போது முன்பக்க காம்பவுண்டு கேட் திறக்கும் சத்தம் கேட்டது. இதனால் யார் வருகிறார்கள் என்று மறைந்து இருந்து பார்த்தேன். அப்போது வேலைக்கார பெண் உள்ளே வந்து கொலை சம்பவத்தை பார்த்து வெளியே ஓட முயன்றார். அவளை வெளியே தப்பவிடாமல் பிடித்தேன். அவரை வெளியே விட்டால், என்னை பற்றி தகவல்களை கூறி விடுவார் என்று பயந்து அவரையும் கொலை செய்ய முடிவு செய்து, சமையல் அறைக்கு இழுத்து சென்று அவளையும் குத்தினேன். அவர் சாகாமல் போராடியதால் அங்கு கிடந்த பாத்திரங்களால் தலையில் வேகமாக அடித்து கொன்றேன் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், பணிப்பெண்ணின் தாய் சார் எம் புள்ளய ஏன் அவன் கொன்னான்னு நிக்க வைச்சு கேள்விக் கேட்கனும் அப்பத் தான் எங்க மனசு ஆறும். அதா மட்டும் செய்ங்கய்யா என  நெல்லை போலீசாருக்கு கோரிக்கைகள் வந்தது.

இந்நிலை, நேற்று முன்தினம் கார்த்திகேயனிடமிருந்து வாக்குமூலம் பெற்ற காவல்துறை தனிப்படையினர், வாக்குமூலத்திற்கு பின் கொலை நடந்த முன்னாள் மேயர் வீடு, கக்கன் நகர் பகுதி ஆகிய இடங்களுக்கு கார்த்திகேயனை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின் நீதிபதியிடம் ஆஜர்படுத்தும்முன், மாரியம்மாள் உறவினர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்க மேலப்பாளையம் காவல்நிலையத்திற்கு அவனை அழைத்து சென்ற போலீசார் முன்னதாக கொலையான பணிப்பெண் மாரியம்மாளின் பெண் பிள்ளைகள் வீரலெட்சுமி, ஜோதிலெட்சுமி, ராஜேஸ்வரி, அவரது அம்மா, அண்னன் மற்றும் உறவினர்கள் உட்பட அனைவரையும் வரவழைத்து பேசுவதை கேட்க்கும் தொலைவில் ஒரு இடத்தில் மறைவாய் நிற்க வைத்திருந்தது போலீஸ்.

அப்போது கொலையாளி கார்திகேயனிடம், ஆமாம் உனக்கும் அந்த மேயருக்கும் தானே பிரச்சனை? அப்புறம் ஏன்? அந்த வேலைக்காரப் பெண்ணை கொல செஞ்ச? எனக் கேட்டதற்கு,  சத்தியமாக அந்தம்மாவை கொலை பண்ற  எண்ணமே இல்ல. கதவை திறந்து வந்த அவங்களுக்கு ரெண்டு பேர் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்ததும் அலறி அழத் தொடங்கினார். நான் அப்போ ஓடிப் போயிடு ஓடிப் போயிடுன்னு கோபமாய் கத்தியை காட்டி மிரட்டினேன், அப்போ அந்த வேலைக்கார பெண் போகல. வேற வழியில்லாம, வெளியில் கத்திக் கூட்டத்த கூட்டி நம்மள மாட்டிவிட்டுடுவாளோன்னு பயந்து தான் அந்தம்மாவ இழுத்து தாக்கி கொல பண்ண வேண்டியாதா போச்சு.

நான் குத்துறப்போ கூட அந்தம்மா, எனக்கு மூணு புள்ளங்க  இருக்கு விட்டுடுன்னு கத்துச்சு. எனக்கு தான் புத்திக் கேட்கல, அது ஆம்பள புள்ளங்களா இருக்கும் பிழைச்சுக்கும்னு தான் குத்திக் கொன்னுட்டேன். அப்புறம் டிவிய பார்த்து தான் தெரிஞ்சது அந்தம்மாவுக்கு மூணும் பொட்டபுள்ளைகன்னு, அது தப்பு தான் என  முகத்தைப் பொத்தி அழுதுள்ளார். மறைவாக பார்த்திருந்த பணிப்பெண்ணின் குடும்பத்தினருக்கு நடந்தது என்ன என்ற தெரிந்துள்ளது.

click me!