
ஐந்து வயதான தனது சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மும்பை நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் வித்தியாசமாக நடந்துகொள்வது குறித்து பாதிக்கப்பட்டவரின் ஆசிரியர் எச்சரித்ததாகக் கூறப்பட்டுள்ளது. புகார்தாரர் தனது மகளிடம் விசாரித்த போது, அவரது அந்தரங்க உறுப்பை தந்தை தொட்டது தெரியவந்தது. இதையடுத்து கணவர் மீது தாய் புகார் அளித்தார். இந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டவர், தனது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து செல்ல விரும்பியதால், தன்னைப் பொய்யாகச் சிக்க வைத்ததாகக் கூறினார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்சோவா) கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் போக்சோவாவின் கீழ் அரணாகவும், அறங்காவலராகவும் இருக்க வேண்டிய தந்தை, தனது ஐந்து வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 40 வயதான குற்றம்சாட்டப்பட்ட நபரை குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது தோல் தோல் தொடுதல் குற்றம் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர் வாதிட்டார். தந்தையின் வழக்குரைஞர் அளித்த வாதங்களை எல்லாம் நிராகரித்து விட்ட மும்பை நீதிமன்றம், ஒரு மகளுக்கு அவரது தந்தைதான் கோட்டையாக, நம்பிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த குற்றச்செயல் என்பது மிகவும் மோசமான குற்றமாகும். சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை விட, குறைவான தண்டனை வழங்க இந்த வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து தனது 5 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றம்சாட்டப்பட 40 வயது நபருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சொந்த மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.