பெற்ற மகனை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற தாய்..! தேனியில் பயங்கரம்..!

Published : Feb 18, 2020, 12:52 PM IST
பெற்ற மகனை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொன்ற தாய்..! தேனியில் பயங்கரம்..!

சுருக்கம்

தொட்டம்மாந்துறை அருகே இருக்கும் ஆற்றுப்பகுதியில் வாலிபர் ஒருவர் தலை, கை, கால்கள் தனித்தனியாக துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற காவலர்கள், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் ராஜன். இவரது மனைவி செல்வி. இவருக்கு விக்னேஷ்வரன் (30), விஜய்பாரத் (25) என இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் விக்னேஷ் இன்ஜினியரிங் படித்துவிட்டு கோவையில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. விக்னேஷின் தம்பி விஜய் பாரத் கடந்த சில நாட்களுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளார். அதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்த விக்னேஷ், அதன்பிறகு கோவை செல்லாமல் இருந்துள்ளார்.

இந்தநிலையில் தொட்டம்மாந்துறை அருகே இருக்கும் ஆற்றுப்பகுதியில் வாலிபர் ஒருவர் தலை, கை, கால்கள் தனித்தனியாக துண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. விரைந்து சென்ற காவலர்கள், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அந்தப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததிலும் ஆற்றுப்பகுதியில் மீன்பிடிக்கும் வாலிபர்கள் அளித்த தகவலின் அடிப்படையிலும் ஒரு மோட்டார் வாகனத்தில் வாலிபருடன் பெண் ஒருவர் சாக்குமூட்டையுடன் அந்த பகுதியில் திரிந்தது தெரியவந்தது.

தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் அந்த பெண் செல்வி என்பதும், தனது இளைய மகன் விஜய் பாரத்துடன் சேர்ந்து விக்னேஷை கொடூரமாக கொலைசெய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான விக்னேஷ் வீட்டில் இருப்பவர்களை தொடர்ந்து தொந்தரவு செய்து வரவே, ஆத்திரத்தில் கொலைசெய்ததாக கூறியுள்ளனர். அதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கொலைசெய்யப்பட்ட விக்னேஷின் கை, கால், தலை, மற்ற பாகங்கள் அனைத்தும் வேறுவேறு இடங்களில் வீசப்பட்டுள்ளன. செல்வியும், விஜய் பாரத்தும் அளித்த தகவலின் படி அவற்றை போலீசார் மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலி பட்டியலின சான்றிதழில் அரசு அதிகாரியான மனைவி..! போட்டுக்கொடுத்து வேலைக்கு ஆப்பு வைத்த கணவர்..!

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி