பெற்ற தாயை சூடு வைத்து, பட்டினி போட்டு கொன்ற மகன் மருமகள்...

Published : Jun 20, 2019, 04:01 PM IST
பெற்ற தாயை சூடு வைத்து, பட்டினி போட்டு கொன்ற மகன் மருமகள்...

சுருக்கம்

கடந்த ஆண்டு பெற்ற தாயை  பட்டினி போட்டு, கொடுமைப்படுத்தி   இந்தியர் மற்றும் அவரின் மனைவி மீது துபாய் கோர்ட் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைத்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர்  ஒரு பெண்மணியை  பெற்றமகனே   செய்தது குறித்து, எதிர் வீட்டில் வசிக்கும் பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

29 வயது இந்தியரும், அவரின் மனைவியும் வசித்த எதிர் வீட்டில்  பிரியங்கா என்ற பெண்.  அந்த பெண்ணிடம் அந்த இந்தியரின் மனைவி என் அத்தை இந்தியாவிலிருந்து வந்துள்ளார். இனி அவர் இங்குதான் இருப்பார் என சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்குப் பின் பிறகு ஒரு நாள் அந்த இந்தியர் வீட்டு மாடியில், அந்த வயதான பெண் நிர்வாணமாகக் கிடந்துள்ளார்.  

அப்போது உடனே அந்த இந்தியரின் வீட்டு கதவைத் தட்டி, உங்கள் அத்தை மாடியின் முற்றத்தில் விழுந்து கிடக்கிறார். வலியால் துடிக்கிறார். உடனடியாக காப்பாற்றுங்கள் என்று கூறி ஆம்புலன்ஸை அழைக்கிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அவர்களோ சரியாக  கண்டுகொள்ளவில்லை, ஒருவழியாக ஆம்புலன்ஸ் வந்தவுடன், ஆம்புலன்ஸ்  உதவியாளர்களுடன் சேர்ந்து அந்த வயதான தாயை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரின் மகன் வரவும் இல்லை, உதவியும் செய்யவில்லை என கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த வயதான தாய்  கை, கால் எலும்புகள் முறிக்கப்பட்டு வீக்கத்துடன், உடல் முழுவதும் பல்வேறு சூடு காயங்களுடன், கண் கருவிழிகள் சிதைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது கூடுதல் அதிர்ச்சி . தீவிர சிகிச்சியில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தற்போது இது குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் அந்த கொடுமைப்படுத்திக் கொன்ற அவரது மகன் மற்றும் மருமகள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்