ஹோட்டல் ரூமே கதி.. காதலர்களுடன் கும்மாளம் - 550 சவரன் நகையை மாடல் அழகியிடம் பறிகொடுத்த தொழிலதிபர்

By Raghupati R  |  First Published Aug 17, 2022, 5:38 PM IST

ஒவ்வொரு முறை ரூம் போடும்போதும் சுவாதிக்கு சேகர் வீட்டில் உள்ள நகைகளை பரிசாக கொடுத்து வந்துள்ளார்.


பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்த தொழிலதிபர் சேகர்,  இவரது தம்பி ராஜேஸ். இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இவர்களது தாயார் தமிழ்ச்செல்வியுடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேகரின் மனைவி பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் திரும்பி வந்து அவரது பீரோவில் வைத்துச் சென்ற 300 சவரன் நகையை பார்த்த போது அது மாயமாகியிருந்தது. இதையடுத்து ராஜேஸின் மனைவி நகை, தமிழ்ச்செல்வியின் நகை 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் பூந்தமல்லி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..“திருந்திய ஓபிஎஸ், திருந்தாத இபிஎஸ்.. எல்லாமே எடப்பாடியின் பதவிவெறி !” ஓங்கி அடித்த டிடிவி தினகரன்

போலீசாரின் விசாரணையில் அண்ணன் சேகர் 550 சவரன் நகையை திருடி அவரது தோழியான இளம்பெண்ணிடம் கொடுத்திருப்பது தெரியவந்தது.சேகர் கொடுத்த 550 சவரன் நகைகள் எங்கே என்று சுவாதியிடம் கேட்டபோது, சேகரின் வீட்டார் என்னை கடத்தி கத்தியை காட்டி மிரட்டி அந்த நகைகளை வாங்கிக்கொண்டதாக சுவாதி கூறினார். ஆனால், அதில் முகாந்திரம் இல்லை. தொடர்ந்து அவரிடம் விசாரித்தபோது பல உண்மைகள் வெளியாகின. 

பைனான்ஸ் தொழில் செய்து வரும் சேகருக்கு வேறொரு நபர் மூலம் சுவாதி அறிமுகமாகியுள்ளார். சுவாதி இளம்வயது பெண் மட்டுமின்றி மாடல் அழகியும்கூட. இந்நிலையில், சுவாதியுடன் சேகருக்கு திருமணஉறவை மீறிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. சேகரும் வசதியானவர் என்பதால் சுவாதி சேகரை வளைத்து போட்டுகொண்டுள்ளார். இருவரும் அடிக்கடி நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து சந்தித்து வந்துள்ளனர்.

மேலும், சுவாதிக்கு பல பாய் பிரண்ட்ஸ் இருந்தாலும் சேகர் போன் அடித்துவிட்டால் சிட்டுக்குருவியை போல சொல்லும் இடத்துக்கு சுவாதி வந்துவிடுவாராம். ஒவ்வொரு முறை ரூம் போடும்போதும் சுவாதிக்கு சேகர் வீட்டில் உள்ள நகைகளை பரிசாக கொடுத்து வந்துள்ளார். அந்த நகைகளை தனது பாய் பிரண்ட்ஸ்களுக்கு சுவாதி செலவழித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும், சுவாதிக்கு பல லட்சங்களையும், நகைகளையும் செலவழித்து வந்த சேகர் கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..“என்னை சந்திக்க வராதீர்கள்..எம்ஜிஆர் பாடல் !” சசிகலா திடீர் உத்தரவு - தொண்டர்கள் ஷாக்

சேகரும் சுவாதியும் ஊட்டி, கோவை என இன்ப சுற்றுலா சென்று தங்கி வந்துள்ளனர். தற்போதும் கூட தாய்லாந்துக்கு செல்ல டூரிட் விசா எடுத்துள்ளனர். அதற்குள் போலீசில் மாட்டிக்கொண்டதால் அந்த பிளான் நின்றுவிட்டது. ஒருநாள் இருவரும் கோவாவில் இருந்தபோது சுவாதியின் ஆண் நண்பர்களும் அந்த ஹோட்டலுக்கு வந்துள்ளனர். அப்போது, சுவாதி மீது சேகர் ஆத்திரமடைந்து சண்டையிட்டுள்ளார். பின்னர் சுவாதி சேகரை சமாதானம் செய்து வைத்து சந்தோசப்படுத்தியுள்ளார்.

இதுவரை சேகர் கொடுத்த நகைகளை சுவாதி தனது நண்பர்களுக்கு செலவழித்து அடிக்கடி ஹோட்டலில் செலவழித்து வந்ததாக தெரிய வருகிறது. சுவாதி கூறியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ‘எனக்கு ஸ்டார் ஓட்டல்களில் மது அருந்தும் பழக்கம் உள்ளது. சேகர் கொடுத்த நகைகளை எல்லாம் விற்று ஸ்டார் ஓட்டலில் மது அருந்தினேன். நிர்வாணப்படுத்தி, நகைகளைப் போட்டு அழகு பார்ப்பார். சேகர் கொடுத்த 3 கார்களை ஆண் நண்பர்களுக்கு கொடுத்துவிட்டேன். 

அந்த டுகாட்டி பைக்கையும் இளம்காதலுனுக்கு கிஃப்ட்டாக கொடுத்துவிட்டேன். எனக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கவேயில்லை. பல முயற்சிகள் எடுத்தும் பயனில்லை. அப்போதுதான் சேகர் வந்து சிக்கினார். என்னுடன் ஜாலியாக பொழுதைக் கழித்த மகிழ்ச்சியில் சேகர் எனக்கு கொடுத்த கட்டணம் மற்றும் பரிசை திருப்பிக் கேட்க யாருக்கும் உரிமையில்லை. சேகர் கொடுத்த பணம், நகை எல்லாம் செலவாகிப்போச்சு’ என்று கூறியுள்ளார். போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகளுக்கு..“போதையில்லா தமிழகம்.. டாஸ்மாக் வசூல் 273 கோடி !” திமுகவை அட்டாக் செய்த அண்ணாமலை!

click me!