மேலூர் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரமா? நடந்தது என்ன..? அதிர்ச்சியூட்டும் திகில் தகவல்..!

Published : Mar 07, 2022, 09:27 AM IST
மேலூர் பள்ளி மாணவி கூட்டு பலாத்காரமா?  நடந்தது என்ன..? அதிர்ச்சியூட்டும் திகில் தகவல்..!

சுருக்கம்

 நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் கடந்த 3-ம் தேதி சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டு சென்றார். வீட்டிற்கு வந்த சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டதால் தனியார்  மருத்துவமனையில் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சிறுமியை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை சீராகவில்லை.

மதுரையில் மாயமான சிறுமி உயிரிழந்த வழக்கில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் இளைஞர் உள்ளிட்ட 8 பேர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் -சபரி தம்பதியினரின் 17 வயது மகள் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.   இவர் கடந்த 14ம் தேதியன்று திடீரென்று காணாமல் போனார். இதனையடுத்து, பெற்றோர் பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, மகளை காணவில்லை என்று தாயார் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும், வழக்கு எதுவும் பதிவு செய்ய வேண்டாம் என்றும் வழக்குப் பதிவு செய்தால் தன்னுடைய மகளின் விவரம் பத்திரிக்கையில் வந்துவிடும் என கருதி மட்டும் மனு ரசீது மட்டும் போட்டு தருமாறு தாய் கேட்டுள்ளார். அதன்படியே போலீசார் ரசீது கொடுக்காமல் இந்த வழக்கை விசாரித்து வந்துள்ளனர். வழக்கின் விசாரணையில் காணாமல் போன பெண் அதே கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர் ஹனிபா என்பவரை காதலித்ததாகவும் அவருடன் சென்றிருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில், நாகூர் ஹனிபாவின் தாயார் மதினாபேகம் கடந்த 3-ம் தேதி சிறுமியை அழைத்து வந்து அவரது வீட்டில் விட்டு சென்றார். வீட்டிற்கு வந்த சிறுமி மிகவும் சோர்வாக காணப்பட்டதால் தனியார்  மருத்துவமனையில் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், சிறுமியை மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிறுமியின் உடல்நிலை சீராகவில்லை. இதனால் மருத்துவமனை ஆலோசனைபடி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமிக்கு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என்பது குறித்து தெரியாமல் சிகிச்சையில் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. எனவே நாகூர் ஹனிபாவை விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

ஆனால், அவர் தலைமறைவாக இருந்ததால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் மதுரை, சென்னை, திருப்பூர் பகுதிகளுக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் வைத்து நாகூர் ஹனிபா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதில், கடந்த 14-ம் தேதி திருமண ஆசை காட்டி சிறுமியை மதுரையில் உள்ள தனது நண்பர் பெருமாள் கிருஷ்ணன் என்பவர் வீட்டிற்கு நாகூர் ஹனிபா அழைத்து வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து ஈரோடு மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தனது சித்தப்பா இப்ராகிம் வீட்டுக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே, சிறுமி மாயமானது தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் நாகூர் ஹனிபா பயந்துபோனார். இதனால் எலி பேஸ்ட் வாங்கிய நாகூர் ஹனிபா அதை சிறுமிக்கு கொடுத்து விட்டு தானும் சாப்பிட்டுள்ளார். ஆனால் சிறிதுநேரத்தில் அவர் அதனை துப்பி விட்டார்.

இதனைத் தொடர்ந்து சிறுமியை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறாமல் சிறுமியை கொண்டு வந்து தனது தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு அவரது வீட்டில் விட்டு விடுங்கள் என நாகூர் ஹனிபா கூறி சென்றுள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி நாகூர் அனிபாவுக்கு உடந்தையாக செயல்பட்ட மதுரை திருநகர் பிரகாஷ், திருப்பரங்குன்றம் கிருஷ்ணன், ராஜா முகமது, திருப்பூர் சாகுல் அமீது, நாகூர் அனிபா தாயார் மதினா பேகம், உறவினர்கள் ரம்ஜான்பேகம் என்ற கண்ணம்மாள், ராஜா முகமது ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

பர்கா போட்டு சுத்தினா தப்பிச்சிரலாமா? சிறுமியைச் சீரழித்துவிட்டு பெண் வேடத்தில் சுற்றிய கான்ஸ்டபிள் கைது!
திருநங்கைக்கு 25 இடங்களில் அரிவாள் வெட்டு! சாக்கடையில் வீசிய லாரி டிரைவர்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!