தொடரும் நீட் சர்ச்சை..! மருத்துவக்கல்லூரி மாணவர் அதிரடி கைது..!

By Manikandan S R SFirst Published Feb 26, 2020, 12:55 PM IST
Highlights

மாணவர் தனுஷிற்கு இந்தி மொழி தெரியாத நிலையில் 2018ம் நடைபெற்ற நீட் தேர்வை பிகாரில் இந்தி மொழியில் எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இதையடுத்து 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சூர்யா என்கிற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களின் ஆவணங்கள் நாடு முழுவதும் சரிபார்க்க மருத்துவ கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டது.

அதன்படி நீட் தேர்வு மூலமாக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு வந்தன. இதில் முறைகேடு நடத்தி இடைத்தரகர்கள் மூலம் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்  தற்போது மேலும் ஒரு மாணவர் நீட் முறைகேடு தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மருத்துவக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் மாணவர் தனுஷ்.

4 வயது மகளுடன் மாடியிலிருந்து குதித்த தந்தை..! உடல்சிதறி ரத்தவெள்ளத்தில் பலி..!

இவர் நீட் தேர்வில் முறைகேடு செய்து சேர்ந்ததாக தெரிய வந்ததையடுத்து சிபிசிஐடி போலீசார் அவரையும் அவரது தந்தையையும் பிடித்து விசாரணை நடத்தினர். மாணவர் தனுஷிற்கு இந்தி மொழி தெரியாத நிலையில் 2018ம் நடைபெற்ற நீட் தேர்வை பிகாரில் இந்தி மொழியில் எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இதையடுத்து 2 நாட்கள் விசாரணைக்கு பிறகு தற்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

click me!