
வீடு புகுந்து சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை கோயம்பேடைச் சேர்ந்த பிரவீன்குமார் (20). அவர் கடந்த 22ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து தரும்படி சிறுமியின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அவர்கள் மறுக்கவே, வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து உடனே கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரின் மொபைல் போன் சிக்கனலை ஆய்வு செய்தனர். அதில், அவர்கள் மதுராந்தகத்தில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போலீசார் இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில், தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பிரவீன்குமார், சிறுமியை காதலித்துள்ளார்.
திருமணத்திற்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மதுராந்தகத்திற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு, ஒரு கோவிலில் திருமணம் செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, இவ்வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் போலீசார் பிரவீன்குமாரை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- கட்டிலில் கட்டிபுரண்டு கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?