வீட்டில் தூங்கி கொண்டிருந்த முதியவர் உலக்கையால் அடித்து கொலை; ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவு

By Velmurugan sFirst Published Apr 20, 2023, 5:16 PM IST
Highlights

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த முதியவர் உலக்கையால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோட்டார் வாகையடி தெருவை சேர்ந்தவர் சுயம்பு (வயது 70), விவசாயி. அதே பகுதியையைச் சேர்ந்தவர் புவனேஷ் என்ற புவனேஷ்வரன் (35). இவர் சுயம்பு வீட்டுக்குள் நுழைந்து இரும்பு தகரம் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுயம்பு வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது புவனேஷ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த சுயம்புவை உலக்கையால் தாக்கி கொலை செய்தார். பின்னர் புவனேஷ் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து கோட்டார் காவல் நிலையத்தில் சுயம்புவின் மகள் சுகந்தி புகார் செய்தார். 

மீன் பிடிப்பதற்காக வெடிகுண்டு வீசிய மீனவர்; நீருக்குள் நீதிய நபர் உடல் சிதறி பலி

புகாரின் அடிப்படையில் புவனேஷ் மீது கொலை வழக்குப்பதிவு கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து புவனேஷ் ஜாமினில் வெளியே வந்தார். கொலை தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.‌ இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடந்தது. இதையடுத்து புவனேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். 

கள்ளக்காதல் விவகாரம்; கலப்பு திருமணம் செய்துகொண்ட காதல் மனைவி 21 இடங்களில் குத்தி கொலை

வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் குற்றம் சாட்டப்பட்ட புவனேசுக்கு ஆயுள் தண்டணையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு ஓராண்டு சிறை தண்டணையும் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மதியழகன் ஆஜரானார். புவனேசிற்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் அவரை பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

click me!