மதுரையில் பயங்கரம்... வடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை...!

Published : Oct 06, 2019, 04:34 PM IST
மதுரையில் பயங்கரம்... வடமாநில இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை...!

சுருக்கம்

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அடுத்துள்ள கென்னட் மருத்துவமனை அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில், வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மதுரையில் வடமாநில இளைஞர் ஒருவர் நள்ளிரவில் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அடுத்துள்ள கென்னட் மருத்துவமனை அருகே ரயில்வே மேம்பாலத்தின் அடியில், வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி மர்ம கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொல்லப்பட்டு வாலிபர் அருகில் பட்டா கத்தி ஒன்றும், கஞ்சா பொட்டலங்களும் கிடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்டவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. மேலும், அவர் யார் என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. ஆட்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரையில் கடந்த சில மாதங்களாக கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்