விழுப்புரத்தை அடுத்து மதுரை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்..!! உயிர் பயத்தில் சிறுமியின் குடும்பம்.!!

By T BalamurukanFirst Published May 14, 2020, 6:25 PM IST
Highlights

விழுப்புரம் அருகே சிறுமி ஒருத்தி காம கொடூரன்களால் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற அவளின் சாம்பல் கூட காயாத நிலையில் மதுரை அருகே இன்னொரு சிறுமி காமகொடூர நாய்களால் சிதைக்கப்பட்டிருக்கிறாள்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தை அரசு அதிகாரிகளே மறைத்தாக புகார் எழுந்திருக்கிறது.


விழுப்புரம் அருகே சிறுமி ஒருத்தி காம கொடூரன்களால் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொல்லப்பட்ட அவளின் சாம்பல் கூட காயாத நிலையில் மதுரை அருகே இன்னொரு சிறுமி காமகொடூர நாய்களால் சிதைக்கப்பட்டிருக்கிறாள்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் இந்த சம்பவத்தை அரசு அதிகாரிகளே மறைத்தாக புகார் எழுந்திருக்கிறது.

"இழவுக்கு வருகிறவள் தாலி அறுக்க மாட்டாள்" ?  பொது ஊழியர்கள் நாடகம் போடாமல் சட்ட பூர்வ கடமையை செய்ய வேண்டும் என்பதே விருப்பம்.இப்படி தொடங்குகிறது அந்த ஃபேஸ்புக் பதிவு...


 
மதுரையில் இருந்து திருச்சி செல்லும் சாலை வழியாக மேலூரில் இருந்து  சுமார் 9.0 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த ஊரான தும்பப்பட்டி கிராமம், இந்த கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையம் மருத்துவமனைக்கு கிழக்கு மண் ரோடு ஓன்று வடக்கு நோக்கி கண்மாய்க்கு போகிறது. இந்த வழியில்தான் அந்த சிறுமியின் 'ஆப்பாடி'பாட்டி வீடு உள்ளது.  

 07.05.2020ம் தேதி டாஸ்மாக் திறந்த நாளன்று பிற்பகல் சுமார் 4 - 5 மணி அளவில் மூதாட்டியும் அவளது மகள் பிள்ளை பேத்தியுமான 10 வயது சிறுமியும் வீட்டின் வடக்கு பக்கம் சுமார் 1.0 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கண்மாய் முள்ளு காட்டில் ஆடு மாடு மேய்த்துக்கொண்டு இருந்தார்கள்.

 

அந்த பக்கமாக வந்த ஓன்று அல்லது இரு காம நாய்கள் சிறுமியை பார்த்து உள்ளது.  அவள் கையில் இருந்த தண்ணீர் பாட்டலை பார்த்து பாப்பா கொஞ்சம்  தண்ணீர் கொடுப்பியா? என்று கேட்டு உள்ளார்கள். இந்த மிருகம் தன்னை வேட்டையாடவே அருகில் வருகிறது என உணராமலேயே வெகுளித்தனமாக சிறுமியும் பாட்டலை நீட்டி உள்ளாள். வாங்கி தண்ணீர் குடிப்பது போல நடித்த காம நாய்    சிறுமியை பலவந்தமாக மறைவான இடத்திற்கு தூக்கி போய் ஆடையை களைந்து வன்புணர்ச்சி செய்த போது கதறி இருக்கிறாள் சிறுமி. காம நாய்க்கு சிறுமியின் அழுகுரல் எந்த பதட்டத்தையும் தரவில்லை ஈவு இரக்கமும் வெளிப்படவே இல்லை.  வாயில் துணியை திணித்து சத்தத்தை நிறுத்தி உள்ளான். திமிறிய சிறுமியை அவள் குரல்வளையை கையால் நெரித்து உள்ளான். வேதனையில் தாங்க முடியாமல் துடித்த சிறுமி மூச்சு திணறி மயங்கி உள்ளாள். 

அப்போது மூதாட்டி ( நேரில் பார்த்தாள் அல்லது பேத்தியை தானாகவே தேடினாளா என்பது தெரியவில்லை )  தனது மகனுக்கு மடிக்குள் மறைத்து  வைத்து இருந்த செல் போனை எடுத்து திருநாவுக்கரசு.. 'அக்கா மகளை தூக்கிட்டு போய்ட்டானுங்க என்று அழுதுள்ளார். சிறுமியின் தாய் மாமன் திருநாவுக்கரசு தனது உறவினர்களோடு பதறி அடித்துக் கொண்டு கண்மாயை நோக்கி ஓடி வருவதை அறிந்த காம நாய் சிறுமியை அப்படியே போட்டுவிட்டு உயிர் தப்பி ஓடி தலைமறைவாகி கொண்டது. சிறுமியின் தாய் மாமன் தனது அக்கா மகள் ரெத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு கிடந்த சிறுமியை உயிரை காப்பாற்றும் நோக்கில் தோளில் தூக்கி போட்டுகொண்டு ஓடி வந்து வீட்டருகில் உள்ள மருத்துவமனையில் காட்ட அங்கே முதலுதவி மட்டும் செய்யப்பட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.

மேலூர் மருத்துவமனை அரசு மருத்துவர்.. 'நீங்க கேஸ் கொடுக்க போறீங்களா? என்று கேட்டுவிட்டு' 'இல்லை என்றதும் விபத்து பதிவேடு முறையாக பதிவு செய்து  போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சிறுமிக்கு பிறப்பு உறுப்பில் ஏற்பட்ட காயத்திற்கு  தையல் போட்டு சிகிக்சையை மட்டும் அளித்து  கடமையில் இருந்து தவறி சிறுமியையும் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்'. 

இந்த சம்பவம் தும்பைபட்டி கிராமவாசிகளுக்கு தெரியவந்ததும் நடந்த கொடுமையை கண்டு கொதித்து போய் சிறுமியின் குடும்பத்தை புகார் கொடுக்க வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அந்த சிறுமியின் பாட்டியோ... "என் பேத்தி எதிர் காலம் பாதிக்கும் அதனால் புகார் கொடுக்க எங்க வீட்டுப்பக்கம் வராதீங்க என்று மிரட்டி வருகிறாராம்'. ஒருவேளை அந்த கள்ளனுக்கு மூதாட்டி பயந்து இருக்கலாம். தொடர்ந்து அந்த காட்டில்தான் அவர் ஆடு மாடு மேய்த்து வாழ வேண்டும். இனி வரும் காலங்களில் அந்த காட்டில் தான் ஆடு மாடு மேய்த்து காலத்தை கழிக்க வேண்டும். தனக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது என்று பயந்து போய் இப்படியெல்லாம் பேசிவருகிறாள் அந்த ஆப்பாடி பாட்டி. 

சிறுமியின் தாய் மகாலெட்சுமி அதே கிராமத்தில் சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் குழந்தைகளுக்கான  சத்துணவு அமைப்பாளர் என்று கூறப்படுகிறது. எப்படி இவர் குழந்தைகளை பாதுகாப்பார் என்ற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது. அரசு ஊழியர்கள் ஒரு குற்ற செயலை மறைப்பது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம் ஆகும். தெரிந்த தகவலை மறுப்பவர்களை கைதும் செய்யலாம் என்கிற சட்டம்.

மேலும் சமூகநீதி அமைப்பின் இயக்குனர் ஆறுமுகத்திடம் பேசினோம்.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம்  அதற்காக  ஏற்படுத்தப்பட்டு இருக்கும் மாவட்ட அளவிலான குழந்தைகள் நல குழுக்கும் (District Level Children Welfare Committee) ஏராளமான கடப்பாடும்  அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. 
குழந்தைக்கு ஏற்பட்ட கொடுமையை அறிந்து எமது சமூக நீதி அமைப்பு கடந்த 10.05.2020ம் தேதி  இடத்திற்கு சென்று சம்பவ சாட்சிகளை விசாரித்த போது சம்பவம் உண்மை என்று உறுதி செய்து ஊடக நண்பர்களுக்கும். சைல்ட் லைன் அமைப்புக்கும் தகவல் கொடுத்தோம்.தும்பைபட்டி கிராமத்தை சேர்ந்த சமுதாய நபர் ஒருவர் போலீசில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரித்து வருவதாக தெரிகிறது. உண்மையை மறைத்த குற்றத்திற்காக மதுரை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சிறுமியின் தாயார் பொது ஊழியர் என்பதால் அவர்  மீது இலாகா பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.அந்த கிராமத்தில் உள்ள விஏஓ தலையாரி ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணிபுரிந்த நர்ஸ் மேலூர் அரசு மருத்துமனையில் பணிபுரிந்த மருத்துவர் காவல்துறையின் உளவுத்துறை போலீசார் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான எட்டிமங்களம் ஸ்டாலின் பேசும் போது..  பாலியல் குற்றம் பெருகி வருகின்றது. சிறுமிகள் சமீப காலமாக பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகிறார்கள். இந்த சம்பவத்தை பொறுத்தவரை சிறுமியின் குடும்பத்தார் அவர்களின் பிரச்சனையாக நினைக்காமல் சமூகம் சார்ந்த பிரச்சனையாக நினைத்து போலீஸ்க்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் காவல்துறை கண்காணிப்பாளர் பாரபட்சம் காட்டாமல் காமகொடூரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். என்கிறார்.

விழுப்புரம் அருகே பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாக வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி அதிமுக நிர்வாகிகள் களியபெருமாள் முருகன் எரித்த கொலை செய்த சம்பவம் தமிழகத்தையை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

இந்த சம்பவத்தில் காவல்துறை என்ன செய்திருக்கிறது  என்பது மர்ம்மாகவே இருக்கிறது. ஆதிக்க சாதியினர்  ஆதிக்கம் உள்ள மேலூரில் ஒரு வேளை குற்றவாளி ஆதிக்க சாதியாக இருப்பாரோ என்கிற சந்தேகம் வலுத்திருக்கிறது. அதனால் தான் போலீஸ் குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்கிறதோ? என்கிற சந்தேகம் அந்த கிராம மக்கள் மட்டுமல்ல சமூக ஆர்வலர்களுக்கும் வலுத்திருக்கிறது.

click me!