பயிற்சி டாக்டர் விஷ ஊசிபோட்டு தற்கொலை !! மதுரையில் சோகம் !!

Published : Sep 13, 2019, 10:04 PM IST
பயிற்சி டாக்டர் விஷ ஊசிபோட்டு தற்கொலை !!  மதுரையில் சோகம் !!

சுருக்கம்

மதுரையில் மருத்துவ மாணவர்  ஒருவர் வேலைப்பளு காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ஆகியார்மடம் உதயம் பேலஸ் பகுதியைச் சேர்ந்தவர் உத்திராபதி. இவரது மகன் உதயராஜ் . இவர் மதுரை மருத்துவக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு (எம்.டி. முதலாம் ஆண்டு) படித்து வந்தார்.

மயக்கவியல் துறை பாடப்பிரிவில் படித்து வந்த இவர் மதுரை முனிசிபல் காலனியில் விஜயகுமார் என்பவரது வீட்டில் தன்னுடன் படிக்கும் நண்பர் ராஜேசுடன் தங்கி இருந்தார்.

நேற்று இரவு உதயராஜ் கல்லூரி முடிந்து வீடு திரும்பினார். அவரது நண்பர் வேலைக்கு சென்று விட்டார். இன்று காலை உதயராஜ் தங்கி இருந்த அறை நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் மதிச்சியம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உதயராஜ் பிணமாக கிடந்தார். அவர் அருகே ஊசி மற்றும் மருந்துகள் சிதறி கிடந்தன. அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து உதயராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மதிச்சயம் போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதயராஜ் தங்கி இருந்த அறையில் கிடைத்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், பணி பளு காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரையில் மருத்துவ மாணவர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்