மதுரையில் பயங்கரம்..16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... 600-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம்.. பகீர் தகவல்..!

Published : Dec 24, 2020, 01:55 PM ISTUpdated : Dec 24, 2020, 02:01 PM IST
மதுரையில் பயங்கரம்..16 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்... 600-க்கும் மேற்பட்டோர் பலாத்காரம்.. பகீர் தகவல்..!

சுருக்கம்

மதுரையில் 16 வயது சிறுமியை 600க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரையில் 16 வயது சிறுமியை 600க்கும் மேற்பட்டோரிடம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் முகவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த சிறுமியை கடந்த 2015ம் ஆண்டு ஜெயலட்சுமி என்ற உறவினர் 10 வயதில் அழைத்து சென்று வளர்த்து வந்துள்ளார். தன்னை நம்பி வந்த சிறுமியையும் ஜெயலட்சுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அனார்கலி, சுமதி, ஐஸ் சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு, சின்னதம்பி ஆகிய பெண்களின் உதவியுடன் மதுரை மட்டுமின்றி பல்வேறு மாவட்டம், மாநிலங்களை சேர்ந்த நபர்களிடம் அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். சிறுமியை ஏமாற்றி நாள்தோறும் ஒவ்வொரு நபர்களிடம் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு தனிப்படையினர் விரைந்து சிறுமியை மீட்டனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய முகவர்கள் அனார்கலி, சுமதி, சந்திரா, தங்கம், ஜெயலட்சுமி, சரவணபிரபு ஆகிய 6 பேரை ஆள் கடத்தல் மற்றும் விபச்சார தடுப்புப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறுமியிடம் கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட 600க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரித்து தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரம் காட்டி வருகின்றனர். மதுரையில் இந்த கொடூர செயல் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

சார், எமர்ஜென்சி... கடிதம் எழுதி வைத்து துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட முன்னாள் போலீஸ் ஐஜி..! பகீர் பின்னணி..!
அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!