ஹாஸ்பிடலில் புகுந்தும் சிறுவனை விடாமல் ஐசியூவில் வைத்து போட்டு தள்ளிய கும்பல்.. பகீள் சிளப்பும் வீடியோ.!

Published : Jul 18, 2022, 02:05 PM ISTUpdated : Jul 18, 2022, 02:07 PM IST
ஹாஸ்பிடலில் புகுந்தும் சிறுவனை விடாமல் ஐசியூவில் வைத்து போட்டு தள்ளிய கும்பல்.. பகீள் சிளப்பும் வீடியோ.!

சுருக்கம்

15 வயது சிறுவனை மருத்துவமனைக்குள் புகுந்து சுற்றிவளைத்து அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

15 வயது சிறுவனை மருத்துவமனைக்குள் புகுந்து சுற்றிவளைத்து அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து அந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் EWS காலனியில் சுமித்(17),  இவரது சகோதரன் சவான்(15) ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் சவானுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, சுமித்தின் மைத்துனர் ராஜ்வீருடன், சவான் வீட்டு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த போது  அதே பகுதியைச் சேர்ந்த சாஹில், அங்கூர் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சவானை கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளனர். 

இதில், காயமடைந்த சவான் மருத்துவமனைக்கு தப்பியோடிய நிலையில் அவனை விடாமல் அந்த கும்பல் துரத்தி வந்தது. இதிலிருந்து தப்பிக்க நினைத்து சவான் அவசர பிரிவுக்கு சென்று அதன் கதவுகளை மூட முயன்றார். ஆனால் அந்த கும்பர் கதவை உடைத்துக் கொண்டு சவானை வாள், அரிவாள், அங்கிருந்த இரும்பு பொருட்களை கொண்டு தாக்கியது.

தாக்குதல் பற்றி அறிந்ததும் சுமித், ராஜ்வீர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் சவான் பரிதததாபமாக உயிரிழந்து கிடந்ததார். இதனிடையே தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியது. இதனை மருத்துவமனை ஊழியர்கள், பொதுமக்கள் என யாருமே இந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.  இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானது. இதனையடுத்து, குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.  

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி