திருமணமான பெண்ணுக்கு லவ் டார்ச்சர்.. காதல் கடிதம் எழுதிய ரோமியோவுக்கு ஒரு வருடம் ஜெயில்.. நீதிமன்றம் ஆப்பு.

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2021, 6:27 PM IST
Highlights

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2018ல் செசன்ஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு வருட சிறை தண்டனையுடன், 40 ஆயிரம் பணம் அபராதம் விதித்தது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். 

திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்து டார்ச்சர் செய்த இளைஞருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 90 ஆயிரம் அபராதமும் விதித்து பம்பாய் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான பெண்களுக்கு பாதுகாப்பையும், உரிய மாண்பும் காக்கப்பட வேண்டுமென அதில் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. ஒரு பெண்ணை காதலிப்பது, திருமணம் செய்வது குற்றமல்ல, ஆனால் திருமணமான பெண்ணுக்கு காதல் என்ற பெயரில் கடிதம் கொடுத்து, தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்துவது போன்றவை மகா குற்றம், என மும்பை உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 

திருமணமான 47 வயது பெண்ணுக்கு காதல் கடிதம் எழுதிய நபருக்கு தான்  90 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2011 இல் நாக்பூரில் மளிகை கடை நடத்தும் ஸ்ரீகிருஷ்ணா திவாரி என்ற நபர் அங்கு பணிபுரியும் திருமணமான பெண்ணுக்கு காதல் கடிதம் கொடுக்க முயன்றார். ஆனால் அதை அந்தப்பெண் ஏற்க மறுத்தார். அதனால் அந்த காதல் கடிதத்தை கிழித்து அந்த பெண்ணின் மீது ஸ்ரீகிருஷ்ணா திவாரி வீசினார், அடுத்த நாளும் அவ்வாறே  அவர் அந்த பெண்ணிடம் நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அகோலா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2018ல் செசன்ஸ் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவருக்கு இரண்டு வருட சிறை தண்டனையுடன், 40 ஆயிரம் பணம் அபராதம் விதித்தது. ஆனால் தீர்ப்பை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.  அதில், அந்தப் பெண்ணிடம் கொடுத்த பணத்தை தான் திருப்பி கேட்டதாகவும், அதனால் அந்தப் பெண் தன் மீது இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும் அவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இந்த வழக்கில் அந்தப் பெண் தரப்பில் உறுதியான ஆதாரங்கள் இருந்ததால், அந்த இளைஞரின் வாதங்களை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

அதேபோல குற்றம்சாட்டப்பட்டவர் ஏற்கனவே 45 நாட்கள்  சிறையிலிருந்ததால் அவருக்கு இரண்டு ஆண்டுகளிலிருந்து சிறை தண்டனை ஒரு வருடமாக குறைக்கப்பட்டது. ஆனால் அபராதத் தொகை 90 ஆயிரமாக அதிகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அந்த நபர் 85 ஆயிரம் செலுத்தினால் போதும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும், நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு திருமணமான பெண்களை குறிவைத்து வலைவீசும் ரோமியோக்களுக்குஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

 

click me!