வரதட்சணை கொடுமை..? காதல் திருமணம் செய்த மனைவியை 4 மாதங்களில் தலையில் கல்லைப்போட்டு கொன்ற கணவர்..!

By vinoth kumarFirst Published Feb 4, 2020, 5:46 PM IST
Highlights

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (34). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ரே‌ஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா (22). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் தான் ஆகிறது. இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டார். பிறகு தனியாக வீடு வாடகை எடுத்து கணவர், மனைவி இருவரும் வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் பெற்றோர் மகனை ஏற்றுக்கொண்டதால் மனைவி  திவ்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

தஞ்சாவூர் அருகே வரதட்சணை கொடுமையால் காதல் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (34). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு ரே‌ஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி திவ்யா (22). இவர்களுக்கு திருமணமாகி 4 மாதம் தான் ஆகிறது. இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டார். பிறகு தனியாக வீடு வாடகை எடுத்து கணவர், மனைவி இருவரும் வாழ்ந்து வந்தனர். காலப்போக்கில் பெற்றோர் மகனை ஏற்றுக்கொண்டதால் மனைவி  திவ்யாவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில், திவ்யாவிடம் கணவர் ரகுபதி மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் நள்ளிரவு ரகுபதி வரதட்சணை கேட்டு மனையிடம் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். ஆனால், ஆத்திரம் அடங்காத கணவர் தூக்கிக்கொண்டிருந்த காதல் மனைவியின் மிது கல்லை போட்டதில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கணவர் ரகுபதி அவரது பெற்றோர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 4 மாதமே ஆவதால் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வரதட்சணை கொடுமையால் கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

click me!