லாட்டரி வேட்டை... மாறு வேடத்தில் சென்று மதுரையில் கத்தைக் கத்தையாக அள்ளியது போலீஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 14, 2019, 6:13 PM IST
Highlights

இந்நிலையில்  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்வராஜ் காம்ளக்ஸில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

மதுரை அலங்காநல்லூரில் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த இருவரை  போலீசார்  கைது செய்ததுடன்  40 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப் பணத்தை போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர்.   விழுப்பரத்தில் லாட்டரி சீட்டு கொடுமையால் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளே இல்லை , முற்றிலுமாக  ஒழிக்கப் பட்டுவிட்டது  என்று சொல்லி வந்தாலும் ,  பரவலாக கள்ள மார்கெட்டுகளில் லாட்டரி சீட்டுகள் உலா வந்துகொண்டுதான் இருக்கின்றன .  அடிக்கடி அதன் கொடூர முகம் வெளிப்பட்டுக்க கொண்டுதான் இருக்கின்றன.  பல இடங்களில் மௌனமாக பலர் மனப் புழகத்தில்  லாட்டரி கொடுமையால்  நிம்மதி இழந்து செத்து செத்து பிழைத்து வருகின்றனர்.  விழுப்புரம் தற்கொலைக்கு பின்னர் லாட்டரியின் கொடூர முகம்  மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது .  இந்நிலையில்  போலீசார்  மீண்டும் லாட்டரி வேட்டையில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் .

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள செல்வராஜ் காம்ளக்ஸில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் மாறுவேடத்தில் சென்று லாட்டரி சீட்டு வாங்குவது போல் நடித்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைசெய்து வந்த இருவரை மடக்கி பிடித்தனர் .விசாரணையில் விற்பனையில் ஈடுபட்டது மதுரை உச்ச பரம்பு மேடு பகுதியை சேர்ந்த கமலதாசன் (42) மற்றும், ஈரோட்டை சேர்ந்த ராஜா (29) ஆகிய இருவரையும்  கைது செய்து அவர்களிடமிருந்த 40 ஆயிரம் மதிப்புள்ள பூட்டான் மாநிலத்தின்  1134  லாட்டரி சீட்டுகள்  மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்க பணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.  
 

click me!