கள்ளகாதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு மது விருந்து... மட்டையான பிறகு நள்ளிரவில் மனைவி செய்த காரியம்..

Published : May 10, 2022, 04:50 PM IST
 கள்ளகாதலுக்கு தடையாக இருந்த கணவனுக்கு மது விருந்து... மட்டையான பிறகு நள்ளிரவில் மனைவி செய்த காரியம்..

சுருக்கம்

திருமணத்திற்கு புறம்பாக ஈடுபட்டுவந்த மனைவி அதற்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.  இந்தச் சம்பவம் தெலங்கான மாநிலம் மஹாபூபாபாத் மாவட்டம் கொட்டகுடாவில் நடந்துள்ளது.    

திருமணத்திற்கு புறம்பாக ஈடுபட்டுவந்த மனைவி அதற்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.  இந்தச் சம்பவம் தெலங்கான மாநிலம் மஹாபூபாபாத் மாவட்டம் கொட்டகுடாவில் நடந்துள்ளது.

நாளேடுகளில் திறந்தாலே கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் நிரம்பியிருக்கிறது. அதில் பெரும்பாலும் கொலை சம்பவங்களை ஆக்கிரமித்துள்ளன. அக்கொலைச் சம்பவங்கள் பெரும்பாலும் கள்ளக்காதலனால் நடந்தவைகாளாகவே உள்ளன. இதுபோன்ற குற்றங்களை தடுக்க எத்தனை நடவடிக்கைகளை காவல் துறை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. திரும்பிய பக்கமெல்லாம் கள்ளக்காதல் அதனால் ஏற்படும் கொலைகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கானா மாநிலம் மஹாபூபாபாத் மாவட்டத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து காவல்துறை தெரிவித்துள்ள விவரம் பின்வருமாறு:-  குகுலோத்து ரஞ்சித் (40) ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார்.

அவரது தாயார் மாடிக்கு சென்று பார்த்தார் ஆனால் பொழுது விடியும் வரை அவர் கீழே வரவில்லை, இந்நிலையில் ரஞ்சித் இறந்து விட்டதாக அவரது மனைவி கதறி அழுதார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரது கணவரை பரிசோதித்தனர். உடனே இதுகுறித்து கொட்டகுடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து மஹபூபாபாத் டிஎஸ்பி, கூடூர் சிஐ யாசின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். முதல்கட்ட விசாரணை நடத்தியதில் இறந்தவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் என்பது தெரிந்தது. இதுகுறித்து மேலும் போலீசார் கூறுகையில், கடந்த ஆண்டு குகுலோத்து ரஞ்சித் கடந்த ஆண்டு தனது மனைவியுடன் ஹனுமகோண்டாவில் தச்சு வேலை செய்வதற்காக குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அங்கு ரஞ்சித்தின் மனைவிக்கு வாரங்கல் மாவட்டம்  நர்சம் பேட்டையை  சார்ந்த ஒருவருடன் திருமணத்துக்கு புறம்பான தொடர்பு ஏற்பட்டது.

இது கணவன் ரஞ்சித்துக்கு தெரியவரவே கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக பெரியோர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து நடந்தது. இந்நிலையில் அனும கொண்டாவை காலி செய்துகொண்டு சொந்த கிராமத்துக்கு திரும்பினார் ரஞ்சித், இந்நிலையில் கணவன் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் கணவனை தீர்த்துக்கட்ட அவரது மனைவி முடிவு செய்ததாக தெரிகிறது. இந்நிலையில் கோடைகாலம் என்பதால் தினமும் குழந்தைகளுடன் வீட்டு மாடியில் அனைவரும் தூங்கினர்.

அப்போது ரஞ்சித்துக்கு அவரது மனைவி மது வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த ரஞ்சித்  போதையில் உறங்கிவிட்டார். அப்போது நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த சாந்தியின் கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பனும் கணவன் ரஞ்சித்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

இத்தகவலை போலீசாருக்கு உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவரது மனைவி கள்ளக்காதலுடன் சேர்ந்து ரஞ்சித்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!