மகளைத் திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி டாச்சர் பண்ணிய போலீஸ் !! கள்ளக் காதலி தற்கொலை!!

Published : Oct 12, 2018, 09:35 AM IST
மகளைத் திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி டாச்சர் பண்ணிய போலீஸ் !! கள்ளக் காதலி தற்கொலை!!

சுருக்கம்

வேலூர் அருகே கள்ளர்க் காதலியிடம் அவரது மகளை திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி போலீஸ் ஒருவர் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் வாலாஜா அடுத்த மேல்புதுப்பேட்டை பஜனை தெருவை சேர்ந்தவர் கல்பனா . 36 வயதான அவர் கணவர் ரமேஷ்குமாரை பிரிந்த இவர், 2 மகள்களுடன் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், சென்னை ஆவடியில் போலீஸ் காரராக பணியாற்றிவரும் காவேரிப்பாக்கத்தை குமரேசன் என்பவருக்கும்  கல்பனாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து போலீஸ்காரர் அடிக்கடி கல்பனா வீட்டிற்கு வந்து சென்றார். அப்போது, கல்பனாவின் 18 வயது நிரம்பிய மூத்த மகளை அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதையடுத்து மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி கேட்டு கள்ளக்காதலியை வற்புறுத்தினார். இதற்கு கல்பனா ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

மகள் மீதான மோகத்தில் இருந்த கள்ளக்காதலனை இனிமேல் தன்னை சந்திக்க வீட்டிற்கு வர வேண்டாம் என்று கல்பனா எச்சரித்தார். ஆனால், அவர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு வீட்டில் கல்பனா தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த மகள்கள் கதறி அழுதனர். வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக, கல்பனாவின் மூத்த மகள் போலீசில் அளித்த புகார் மனுவில், தன்னுடைய தாய்க்கும், போலீஸ்காரர் ஒருவருக்கும் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தால் தன்னை திருமணம் செய்து வைக்க குமரேசன் சண்டை போட்டார்.

இதற்கு தாய் மறுத்தார். இந்த ஆத்திரத்தில் என்னுடைய தாயை குமரேசன் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  அந்த மனுவில் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்