காதலிக்கும் போதே மூன்று முறை கருக்கலைப்பு !! காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி !!

Published : Nov 05, 2019, 08:26 PM IST
காதலிக்கும் போதே மூன்று முறை கருக்கலைப்பு !! காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி !!

சுருக்கம்

பெண் போலீஸ் ஒருவர் தன்னை காதலித்தவர் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் எறும்பு சாக்பீஸைத் தின்று  தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த பெண் போலீஸ் காதலிக்கும் போதே மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் அதனால் அவர் மீது சந்தேகப்பட்டு திருமணம் செய்ய மறுத்தாகவும் கூறப்படுகிறது.  

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நதியா . திருப்பூர் ஆயுதப் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். நதியா ஊரைச் சேர்ந்த கண்ணன், என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் துறையில் டாக் ஸ்குவாட் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

கண்ணனும் நதியாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக  காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமூகம் மற்றும் ஒரே ஊர் என்பதால், திருமணத்தில் பெரிதாக ஏதும் பிரச்சினை வராது என்று நதியா கருதியிருக்கிறார். 

ஆனால் கண்ணன், நதியாவைத் திருமணம் செய்துகொள்ள மறுத்திருக்கிறார். இதனால் மனமுடைந்த நதியா எறும்பு சாக்பீஸ் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆபத்தான நிலையிலிருந்ததால், அஞ்செட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நதியா காதலிக்கும்போதே, மூன்று முறை கர்ப்பமாகிக் கருக்கலைப்பு செய்திருப்பதாகவும், இதன் காரணமாகவே கண்ணன் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!