ஏழு மாத கர்ப்பிணி காதலியை கற்பழித்துக் கொன்ற கவர்னர் !! காட்டிக் கொடுத்த டிஎன்ஏ பரிசோதனை….

By Selvanayagam PFirst Published Sep 25, 2018, 5:59 PM IST
Highlights

கென்யாவைச் சேர்ந்த  கவர்னர் ஒருவர் தனது 7 மாத  கர்ப்பிணி காதலியை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் மிகோரி மாநிலத்தின் கவர்னராக இருந்தவர் ஒகோத் ஒபாடா. இவருக்கும் ஷாரோன் என்ற 26 வயது மாணவிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் ஷாரோன் கர்ப்பமானார்.

இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் ஷாரோன் காட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து நடந்தப்பட்ட விசாரணையில் ஏழு மாதம் கர்பிணியாக இருந்த ஷாரோனை கொலை செய்த வழக்கில் அவரது காதலரும்,  மிகோரி மாகாணத்தின் கவர்னருமான ஒகோத் மீது போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

முதற்கட்ட விசாரணையில் ஹாரோனுக்கு தனக்கு உள்ள  தொடர்பை மறுத்த ஓகோத் பின்னர் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் டிஎன் ஏ சோதனையில் ஷாரோனின் வயிற்றிலுள்ள சிசுவின் டிஎன்ஏவும், ஓகோத்தின் டிஎன்ஏவும் ஒத்து போகியுள்ளது.

மேலும் ஷாரோன் கொல்லப்படுவதற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைச் செய்யபட்டிருக்கிறார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து ஒகோத்தை உடனடியாக போலீஸார் கைது செய்தனர்.

ஷாரோன் கர்ப்பமானதில்,  ஒகோத்துக்கு விருப்பம் இல்லை என்றும் இதன் காரணமாக இந்தக் கொலை நடத்தப்பட்டிருப்பதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தக் கொலையில் ஒகோத்துக்கு உதவி புரிந்த அவரது இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு உள்ளூர் அதிகாரிகள், ஒரு ஒட்டுநர் என அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

click me!