18 வயது பெண் நிருபரின் உதட்டைக்கவ்விய 60 வயது பத்திரிகை ஆசிரியர்! வெடித்துக் கிளம்பிய பாலியல் கொடுமை...

By sathish kFirst Published Oct 12, 2018, 2:54 PM IST
Highlights

‘மீடூ’வில் இரு பெண் பத்திரிகையாளர்கள் மத்திய அமைச்சருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்துள்ளதால், அவரின் பதவி பறிக்க காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

METOO’ பஞ்சாயத்துகளில் சினிமா பிரபலங்களைத் தாண்டி மெல்ல பத்திரிகை ஆசிரியர்களின் பெயர்களும் அடிபட ஆரம்பித்துள்ளன. தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் எம்.ஜே.அக்பர்  பல முக்கிய பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர்.’கடந்தவாரம் அவருக்கு எதிராக இரு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளதால், அவரின் பதவி பறிபோக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர், நைஜீரியாவில் இருந்து திரும்பியதும் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளன.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள், வெளியே சொல்லாமல் அவர்களுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த நிலையில், (#MeToo) ஹேஸ்டேக் என்ற இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையை பொதுவெளியில் கூறிவருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இந்த ‘மீடூ’ விவகாரம் பல பிரபலங்களை சிக்கவைத்து, அவர்களை நிலைகுலைய வைத்து வருகிறது. இந்தியாவில், திரையுலகில் நடிகை, பாடகி போன்றோர் தங்களின் பாலியல் பாதிப்பு குறித்து கருத்துகளை பதிவிட்டு வருவதால், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர் சிக்கி வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய அமைச்சர் வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது, பத்திரிகையாளர் பிரியா ரமணி மற்றும் மற்றொரு பத்திரிகையாளர் ஒருவரும் புகார் தெரிவித்துள்ளனர். மும்பையில் ஒரு ஹோட்டலில் அக்பர் தங்கியிருந்த போது, அவரிடம் பேட்டி காண சென்ற பிரியா ரமணியிடம், அவர் தவறாக நடந்து கொண்டதாகவும், அப்போது அவர் போதையில் பழைய சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்டவர். அவர், தி டெலிகிராப், ஏசியன் ஏஜ், தி சண்டே கார்டியன் போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது பாஜ கட்சியின் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். பாதிக்கப்பட்ட இரு பெண் பத்திரிகையாளர்கள் அமைச்சர் அக்பரால் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை, தற்போது ‘மீடூ’ இயக்கத்தில் புகாராகத் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் மீதே இரு பெண்  பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. புகாருக்கு ஆளான அமைச்சர், தற்போது, 70 உறுப்பினர்கள் கொண்ட குழுவோடு நைஜீரியா நாட்டுக்கு ஒரு  மாநாட்டுக்காக சென்றுள்ளார். நாளைதான்  அந்தக்குழுவினர் இந்தியா திரும்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை  எம்.ஜே.அக்பர் எந்தவிதமான கருத்தும் தனது டுவிட்டர் அல்லது வேறு தளத்தில் தெரிவிக்கவில்லை. அவரது மவுனம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிகையாளர் பிரியா ரமணி, அமைச்சரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து தெரிவித்த கருத்துகளை, பல பெண் பத்திரிகையாளர்கள் வரவேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. பத்திரிகையாளர்கள் வெளியுறவுத்துறைஅமைச்சர் சுஷ்மா சுவராஜை அணுகி கேட்டபோது, அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். இதற்கிடையே, பாஜ கட்சியின் செய்தித் தொடர்பாளர் சமிட் பத்ராவிடம் நிருபர்கள், அமைச்சர் மீதான பாலியல் புகார் குறித்து கேட்டபோது, ‘குஜராத்தில் குடியேறியவர்கள் மீது வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து மட்டும் கேள்வி கேட்கவும்’ எனக்கூறிவிட்டு, பாலியல் புகாருக்கு பதில் தர மறுத்துவிட்டார். மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த ‘மீடு’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். 

அதனால், அக்பரின் அமைச்சர் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறுகையில், ‘பாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் அக்பர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது உண்மையில் மிகவும் கவலைப்படவேண்டிய விஷயம். இதுதொடர்பாக அமைச்சர் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். அமைதியாக இருப்பது எதற்கும் தீர்வாகாது. இந்த விஷயத்தில் அமைச்சர் அக்பர் மீது பிரதமர் மோடி விசாரணை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் அமைச்சர் மற்றும்  பிரதமர் ஆகியோரிடமிருந்து நாங்கள் உரிய பதிலை எதிர்பார்க்கிறோம்’ என்றார். 

நரக வேதனையை அனுபவித்தேன்: சுமா ராஹா என்ற பெண் பத்திரிகையாளர் தனது பதிவில், ‘கடந்த 1995ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஓட்டலில் அவரை பேட்டி எடுக்க சென்ற போது, அவரின் நடவடிக்கைகள் என்னை பாதித்தன. அப்போது அவர் போதையில் இருந்தார்’ என தெரிவித்துள்ளார். 

மற்றொரு பெண் பத்திரிகையாளர் பிரீனா சிங் பிந்திரா, ‘அக்பர், பணி தொடர்பாக கலந்தாய்வு நடத்த ஹோட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது, நள்ளிரவு இருக்கும். நரக வேதனையை அனுபவித்தேன்’ என்று கூறியுள்ளார். 

இன்னொரு அமெரிக்க பத்திரிகையாளர் தனது 18 வயதில் இண்டெர்ன்ஷிப்புக்காக அக்பரிடம் வந்தபோது எதிர்பாராமல் திடீரென்று வாயோடு வாய்வைத்து முத்தம் தனது உதட்டைக் கவ்வியதாக பகீர் பதிவு போட்டிருக்கிறார். இவரோடு சேர்ந்து,லேட்டஸ்டாக அக்பரின் மீது புகார் கூறும் பெண்களின் அரை டஜனை எட்டியுள்ளது.

click me!