சிங்க முகமூடி, கையில் ஸ்ப்ரே பாட்டில்.. இத தான் செய்தேன் நடித்துக்காட்டிய கொள்ளையன்.. விளக்கும் போலீஸ்

Published : Dec 20, 2021, 10:03 PM ISTUpdated : Dec 20, 2021, 10:04 PM IST
சிங்க முகமூடி, கையில் ஸ்ப்ரே பாட்டில்.. இத தான் செய்தேன் நடித்துக்காட்டிய கொள்ளையன்.. விளக்கும் போலீஸ்

சுருக்கம்

Jos alukkas Robbery : வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடித்தது எப்படி என போலீசாருக்கு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டீக்காராமன் நடித்துக் காட்டியுள்ளார்.  

வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 15-ம் தேதி 15 கிலோ தங்கம், 500 கிராம் வைரம் கொள்ளை போனது. நகைகடையில் பின்பக்க சுவற்றில் துளையிட்டு இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்ந்திய கொள்ளையனை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், ஒடுக்கத்தூர் அடுத்த குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கொள்ளையில் ஈடுப்பட்டதும் திருடிய நகைகளை உருக்கி சுடுகாட்டில் மூன்று இடங்களில் புதைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நகைகளை காவல்துறையினர் தோண்டி எடுத்தனர்.

திருட்டு வழக்கில் கைதானவர்களை போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துவந்து எப்படி கொள்ளையில் ஈடுபட்டனர் என்பதை நடித்துக்காட்டச் சொல்லி அதனை வழக்காக பதிவுசெய்வது வழக்கம். அதன்படி சிங்க முகமூடி அணிவிக்கப்பட்டு, ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்கு டீக்காராமன் அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது எப்படி என டீக்காராமன் போலீசாருக்கு நடித்துக் காட்டியுள்ளார். சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது போல், தரைத்தள சுவரை துளையிட்டு உள்ளே வந்தது எப்படி என்றும் சிசிடிவி காட்சிகளில் ஸ்ப்ரே அடித்தபிறகு என்ன நடந்தது என்பதையும் நடித்துக் காட்டிள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சுவரை எவ்வாறு துளையிட்டார்? ஃபால் சீலிங் உடைக்கப்பட்டது எப்படி? நகைகளை எடுத்துக்கொண்டு எவ்வாறு வெளியேறினார் என்பதையும் நடித்துக்காட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக கடந்த 15 ஆம் தேதி இந்த திருட்டு சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். கொள்ளை கும்பலைப் பிடிக்க 4 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முதல்கட்டமாக நகைகடையை முழுவதுமாக சோதனை செய்த தனிபடை போலீசார், நகைகடை மற்றும் சுற்றியுள்ள பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். மேலும், வேலூரில் உள்ள தங்கும் விடுதிகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள வீடுகள், மாவட்ட எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தினர். நகைக்கடை அமைந்துள்ள தோட்டப்பாளையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். 

இதனிடையே நகைக்கடையில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சிக்கிய சிசிடிவி பதிவில், நகைக்கடை திருட்டு சம்பவத்தில் கடையின் பின்பக்கம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த சிங்க முகமூடி அணிந்த நபர் ஒருவர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் மீது பெயிண்ட் ஸ்பிரே அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. சிசிடிவி பதிவில், நகைக்கடைக்குள் நுழையும் மர்ம நபர் 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், மெலிந்த தேகத்துடன் இருப்பதால் அந்த வயதுடைய நபர்களில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பட்டியலை கொண்டு விசாரணை நடத்தது.  இந்நிலையில் நகைக்கடையில் வெளியில் உள்ள சிசிடிவி காட்சியில் சம்பவ நேரத்தில் கடையின் சற்று தொலைவில் ஒரு ஆட்டோ ஒன்று நீண்ட நேரமாக நிற்பது பதிவாகியிருந்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் நடத்தியதில் அந்த ஆட்டோ உள்ளூரைச் சேர்ந்தது என்பதை கண்டுபிடித்தனர். 

பின்னர்  வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த டீக்காராமன்  என்பவரை கைதுசெய்து போலீசார் நேற்று முதல் விசாரித்து வருகின்றனர்.  நகை திருட்டு வழக்கில் பிடிப்பட்டுள்ள ராமன் மீது ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் இருப்பதால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர். வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் கொள்ளையன் தங்கியிருந்த ஒடுக்கத்தூர் பகுதியில் வேலூர் எஸ்.பி ராஜேஷ் கண்ணா நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஒடுக்கத்தூர் அடுத்த உத்திர காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த கொள்ளையடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர். 

PREV
click me!

Recommended Stories

சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை
கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?