மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தாய்... விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

Published : Jan 26, 2019, 04:59 PM IST
மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த கொடூர தாய்... விசாரணையில் வெளியான பகீர் தகவல்!

சுருக்கம்

கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற தாயே குழந்தையை கொன்று வழப்பறி கொள்ளையர்கள் தள்ளிவிட்டதாக நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து அந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். 

கள்ளக்காதல் விவகாரத்தில் பெற்ற தாயே குழந்தையை கொன்று வழப்பறி கொள்ளையர்கள் தள்ளிவிட்டதாக நாடகமாடியது அம்பலமானது. இதனையடுத்து அந்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். 

சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே இலுப்பநத்தம் ஊராட்சியை சேர்ந்தவர் சிவசங்கரன்(34). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறரர். இவரது மனைவி பிரியங்காகாந்தி(24). இவர்களது மகள் ஷிவானி(5). சிவசங்கர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஷிவானி என்கிற 5 வயது குழந்தை உண்டு.

 

நேற்று காலை தலைவாசல் – வீரகனூர் நெடுஞ்சாலையில் உள்ள கிணற்றில் இருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் ஓடிச்சென்று காவல்துறை உதவியுடன் அப்பெண்ணை மீட்டனர். ஆனால் அவரது ஷிவானி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக தாயிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த வழியில் மகளுடன் நடந்து வந்த போது, முகமுடி அணிந்த கொள்ளைக்காரர்கள் தனது நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை பறித்துவிட்டு, தன்னையும், குழந்தையையும் கிணற்றில் தள்ளிவிட்டதாக போலீசாரிடம் கூறியிருந்தார். ஆனால் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் வழிப்பறி செய்வதற்கான எந்த தடயமும் இல்லை. இதனால் பிரியங்கா காந்தி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனையடுத்து பிரியங்கா காந்தியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதில் கொள்ளையடிக்கப்பட்டதாய் கூறிய நகைகள் பிரியங்கா காந்தியே அடமானம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணவர் சிங்கப்பூரில் இருப்பதால் பல ஆண்களுடன் நெக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

அவ்வப்போது தன் மனைவியிடம் பேசுவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சங்கர், குழந்தையிடம் பேசும்போது அம்மா பிற ஆண்களிடம் பேசுவதை யதாரத்தமாக அக்குழந்தை கூறியதாக தெரிகிறது.  இதனால் ஆத்திரமடைந்த தாய் பிரியங்கா காந்தி பிணற்றில் வீசி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்