அம்மா உல்லாசமாக இருக்க மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்த வைத்த கொடூரம்.. கண்டக்டரின் காம லீலைகள் அம்பலம்.!

Published : Dec 13, 2021, 05:48 PM IST
அம்மா உல்லாசமாக இருக்க மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்த வைத்த கொடூரம்.. கண்டக்டரின் காம லீலைகள் அம்பலம்.!

சுருக்கம்

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை. 

ஜெயங்கொண்டத்தில் கள்ளக்காதலியின் 13 வயது மகளை 4-வதாக திருமணம் செய்து கர்ப்பமாக்கிய கண்டக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரிய கருக்கை கிராமத்தை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன். இவர் அரசு போக்குவரத்து கழக ஜெயங்கொண்டம் கிளையில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மூன்று முறை திருமணம் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. பரமேஸ்வரி தனது 3  மகள்களில் 13 வயது உடைய இளைய மகளுடன் வந்து ராதாகிருஷ்ணனுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியன்று 13 வயது சிறுமிக்கும், ராதாகிருஷ்ணனுக்கும் பெரிய கருக்கை கிராமத்திலுள்ள ஒரு கோவிலில் வைத்து ராதாகிருஷ்ணனின் தாய் ருக்மணி, கள்ளக்காதலி பரமேஸ்வரி ஆகியோர் சேர்ந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்துள்ளார். இதனால், தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இது தெடர்பாக அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அவர் அளித்த புகாரின் படி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய  போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்டக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் பரமேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி