கட்டிலில் கட்டிப்புரண்டு மனைவியுடன் உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Mar 19, 2022, 2:43 PM IST

 தமிழரசனும், பிரியாவும் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், தமிழரசனிடம் எனது மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு எத்தனை முறை கூறியுள்ளேன். அப்படி இருந்தும் ஏன் எனது மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.


எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த வாலிபரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதல்

Tap to resize

Latest Videos

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசிகுமார் (41). இவரது மனைவி பிரியா (35). இவர்கள் திருப்பூரில் வாடகை வீட்டில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்று வந்தனர். பிரியா பணியாற்றி வந்த பனியன் நிறுவனத்தில் திருவாரூரை சேர்ந்த தமிழரசன் (30) என்பவர் பணியாற்றி வந்தார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து மனைவி மற்றும் தமிழரசனை கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்றிரவு பிரியா இரவு நேர வேலைக்கு செல்வதாக சசிகுமாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இருப்பினும் சந்தேகமடைந்த சசிகுமார் மனைவி வேலைக்குத்தான் சென்றுள்ளாரா? என்பதை அறிய அவர் நேராக பனியன் நிறுவனத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பிரியா இல்லை.

உல்லாசம்

இதையடுத்து தமிழரசன் வசித்து வரும் 15 வேலம்பாளையம் காளியம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு தமிழரசனும், பிரியாவும் உல்லாசம் அனுபவித்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த சசிகுமார், தமிழரசனிடம் எனது மனைவியுடனான தொடர்பை கைவிடுமாறு எத்தனை முறை கூறியுள்ளேன். அப்படி இருந்தும் ஏன் எனது மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசில் சரண்

இதில் ஆத்திரமடைந்த சசிகுமார் வீட்டில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து தமிழரசனின் தலையில் போட்டார். இதில்,  தமிழரசன் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், சசிகுமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை பனியன் நிறுவன தொழிலாளி கொலை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!