36 வயது பெண்ணுடன் 20 வயது இளைஞர் கள்ளக்காதல்.. நம்மள யாரும் வாழ விடமாட்டார்கள் நினைத்து விபரீத முடிவு..!

By vinoth kumarFirst Published Nov 7, 2020, 7:47 PM IST
Highlights

தேனியில் கள்ளக்காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர முடியாதோ என்ற ஏக்கத்தில் விஷம் குடித்ததில் கள்ளக்காதலன் உயிரிழந்தார். கள்ளக்காதலி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தேனியில் கள்ளக்காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர முடியாதோ என்ற ஏக்கத்தில் விஷம் குடித்ததில் கள்ளக்காதலன் உயிரிழந்தார். கள்ளக்காதலி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே முத்துலாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் மகேஸ்வரன் (20). இவர் பெங்களூருவில் பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். கொரோனாவால் சொந்த ஊருக்கு வந்தார்.  இதே பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் இவரது மனைவி மலர்க்கொடி (36) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மலர்கொடிக்கும், மகேஸ்வரனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியுள்ளது. 

இருவரும் அடிக்கடி தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது கணவர் மருகேசனுக்கு நாளடைவில் தெரியவர மனைவியை கண்டித்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன் மலர்கொடி மகேஸ்வரி ஆகியோர் வீட்டை வீட்டு வெளியேறினர். மலர்கொடியை குழந்தையை தன்னுடன்  அழைத்து சென்றார். மனைவி குழந்தைகள் மாயமானது கண்டு முருகேசன் அதிர்ச்சியடைந்தார். 

இதைனயடுத்து, மலர்கொடி செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது. கணவருடன் பேசிய மலர்கொடி மகேஸ்வரனுடன் சேர்ந்து வாழ்வதாக தெரிவித்துள்ளார். பிரச்சனை பெரிதாகும் என்பதால் மகேஸ்வரன் நேற்றிரவு மலர்கொடி மற்றும் குழந்தைகளை காரில் ஏற்றி வந்து முத்துலாபுரத்தில் அவர்களது வீட்டில் விட்டுள்ளார். வீட்டிற்கு சென்ற மகேஸ்வரனை பெற்றோர் கண்டித்துள்ளனர். தங்களை சேர்ந்து வாழவிடமாட்டார்கள் என்று கருதிய கள்ளக்காதல் ஜோடி பூச்சி மருந்தை சாப்பிட்டுள்ளது.  

இதில், இருவரும் மயங்கினர். மலர்கொடியின் குழந்தைகள் அழுது கொண்டிருந்தன. அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மகஸே்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். முதலுதவி சிகிச்சை பின் உயிருக்கு ஆபத்தான நிலையில் மலர்கொடி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

click me!