கள்ளக்காதலியை ரூமில் வைத்து வெறி தீர மகன்கள் செய்த செயல்... அதிர்ச்சியில் தந்தை..!

By vinoth kumarFirst Published May 2, 2020, 4:02 PM IST
Highlights

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரத்தினத்தை நடுப்பட்டிக்கு குமார் அழைத்து வந்தார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்  பேருந்துகள் ஓடவில்லை. இதன் காரணமாக ரத்தினம், ஊருக்கு செல்லாமல் குமாருடன் ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தார். 

தந்தையின் கள்ளக்காதலியை கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து படுகொலை  செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது மகன்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நடுப்பட்டியை சேர்ந்தவர் குமார்(48). விவசாயியான இவர் மூலிகை மருத்துவமும் செய்து வந்தார். இவரது மனைவி திலகம்(40). இந்த தம்பதிக்கு 18 மற்றும் 15 வயதில் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் திலகம், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் குமாரின் மகன்கள் மட்டும் அவருடன் இருந்து வந்தனர். இதற்கிடையே குமாருக்கும், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த ரத்தினம்(46) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியது. இருவரும் தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாமாக இருந்து வந்தனர். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரத்தினத்தை நடுப்பட்டிக்கு குமார் அழைத்து வந்தார். அப்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால்  பேருந்துகள் ஓடவில்லை. இதன் காரணமாக ரத்தினம், ஊருக்கு செல்லாமல் குமாருடன் ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல வாழ்ந்து வந்தார். இது குமாரின் மகன்களுக்கு கடும் கேபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குமார் நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றிருந்தார். அந்தநேரம் ரத்தினம் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது குமாரின் 2 மகன்களும் சேர்ந்து ரத்தினத்தை கத்தியால் கழுத்தை அறுத்தனர். இதில், ரத்த வெள்ளத்தில் ரத்தம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்தினம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில் குமாரின் 2 மகன்களையும் போலீசார் கைது செய்தனர்.

click me!