வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற நண்பனுக்கு பச்சை துரோகம்... கள்ளக்காதலனுடன் மனைவி செய்த காரியத்தை வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய கணவன்..!

Published : Sep 07, 2019, 12:56 PM ISTUpdated : Sep 07, 2019, 01:03 PM IST
வெளிநாட்டுக்கு அழைத்து சென்ற நண்பனுக்கு பச்சை துரோகம்... கள்ளக்காதலனுடன் மனைவி செய்த காரியத்தை வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய கணவன்..!

சுருக்கம்

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை செருப்பால் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞரை செருப்பால் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கள்ளக்காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இந்நிலையில், 
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் கபீர் அஹமத், இர்பான் அஹமத். இருவரும் நண்பர்கள். கபீர்அஹமத் கத்தார் நாட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இர்பான் அஹமத் திருமணமாகி வேலையில்லாமல் வாணியம்பாடியில் இருந்துள்ளார். இதனால், கபீர் அஹமத்திடம் அந்நாட்டில் வேலை வாங்கித் தர கேட்டுள்ளார். அதற்கு கபீர் அஹமத்திடம் 3 மாதத்திற்கான சுற்றுலா விசாவை இர்பான் அஹமத்திற்கு அனுப்பி வைத்தார். அதன்படி இர்பான் அஹமத் கத்தார் நாட்டுக்கு வேலை தேடி சென்றார். அங்கே கபீர் அஹமத் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடி வந்தார்.

அப்போது, கபீர் அஹமத் மனைவியுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால், கபீர் அஹமத் பெரும் அதிர்ச்சியடைந்தார். கத்தார் நாட்டில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை என்பதால் கபீர் அஹமத் அமைதியாக இருந்தார். இதனையடுத்து, கபீர் அஹமத் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு நண்பர் இர்பான் அஹமதுவுடன் இந்தியா திரும்பினார்.

நண்பனின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த இர்பான் அஹமத் மும்பை வந்து இறங்கியவுடன் திடீரென தலைமறைவானார். பின்னர், கபீர் அஹமத் வாணியம்பாடி வந்து இர்பான் அஹமத் வீட்டிற்கு சென்று கத்தார் நாட்டில் நடந்ததை கூறி, அவரை தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தி உள்ளார். அதன் பேரில் உறவினர்கள் இர்பானை கபீர்அஹமத்திடம் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து, இர்பான் அஹமதுவை கபீர் அஹமத் கடுமையாக தாக்கினார். பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து சென்று இர்பான் அஹமதுவின் மனைவியின் கையால் அவரை செருப்பால் அடிக்க வைத்துள்ளார். அப்போது அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்த கபீர் அஹமத், இவர் பெண்களிடமும் தவறாக நடக்க கூடியவர் என்று சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்