சரிவர கவனிக்காத கணவன்.. கள்ளக்காதலனை தேடிய மனைவி... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

Published : Oct 04, 2020, 07:29 PM IST
சரிவர கவனிக்காத கணவன்.. கள்ளக்காதலனை தேடிய மனைவி... இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

சுருக்கம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தாலி கட்டிய மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை தாலி கட்டிய மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலம் எம்.கே.புரம் அருகே உள்ள ஏரியில் அடையாளர் தெரியாத சடலம் மிதப்பதாக கடந்த மாதம் 27ம் தேதி சாந்திபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சங்கர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சங்கரின் மனைவி ஜோதி(30)யிடம் விசாரணை நடத்தினர். ஆனால், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்து வந்ததால் அவரிடம் நேற்று கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தனது கணவரை கள்ளக்காதலன் உதவியுடன் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில் சங்கருக்கும் எனக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அவர் தினமும் முடித்து விட்டு என்னை அடித்து துன்புறுத்துவார். மேலும், என்னை சரிவர கவனிக்காமல் இருந்தார். இதனால், வீட்டின் அருகே சிவகுமார்(42) என்பவரோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், தனிமையில் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.  இந்த விவகாரம் காலபோக்கில் கணவருக்கு தெரியவந்தது. இதை என் கணவர் கண்டித்ததோடு அடிக்கடி துன்புறுத்தினார்.

இந்நிலையில், உல்லாசத்துக்கு இடையூறாக இருக்கும் கணவரை ஒழிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினார். இதனையடுத்து, அவரது மகன் அருண்குமாருடன் சேர்ந்து நாங்கள் 3 பேரும் சேர்ந்து குடித்துவிட்டு மயக்கத்தில் இருந்த எனது கணவரை கயிற்றால் கழுத்து இறுக்கி கொலை செய்தோம். பின்னர், சடலத்தை பைக் மூலம் ஏற்றிச்சென்று ஏரியில் வீசினோம் என்றார். இதனையடுத்து, ஜோதி, அவரது கள்ளக்காதலன் சிவக்குமார் மற்றம் அவரது மகன் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்