என் புருஷன் உயிரோடு இருக்கும் வரைக்கும் நம்ம ஒன்னு சேர முடியாது.. கணவரை கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய மனைவி.!

By vinoth kumar  |  First Published Dec 23, 2022, 10:15 AM IST

நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் ஈஸ்வரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் தேவராஜன்(32). இவரது மனைவி சரண்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்ற தேவராஜை மர்ம கும்பல் கொலை செய்யப்பட்டார்.


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படை ஏவி கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நாமக்கல் மாவட்டம்,  திருச்செங்கோடு அருகே கோழிக்கால்நத்தம் ஈஸ்வரன் நகரை சேர்ந்த எலக்ட்ரீசியன் தேவராஜன்(32). இவரது மனைவி சரண்யா(29). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்ற தேவராஜை மர்ம கும்பல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடதத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tap to resize

Latest Videos

இந்த கொலை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சந்தேகத்தின் பேரில் அவரது மனைவியிடம் கிடுக்கப்பிடி விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். மேலும், சரண்யாவின் செல்போன்களை சோதனையிட்ட போது அடிக்கடி ஆண் ஒருவரிடம் பேசியது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் விசாரிக்கும் பாணியில் விசாரணை மேற்கொண்ட போது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக சரண்யாவின் கள்ளக்காதலன் விமல்குமார் கைது செய்யப்பட்டார். 

இருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. எனக்கு தொழில் ரீதியாக தேவராஜனுடன் பழக்கம் ஏற்பட்டதால், அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்ததால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கணவன் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்து சரண்யாவுடன் உல்லாசமாக இருந்தேன். இந்த விவகாரம் நாளடைவில் தேவராஜனுக்கு தெரியவந்தது. இதனால், மனைவி சரண்யா மற்றும் விமல்குமாரை கண்டித்தார். இதனால், கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் தேவராஜை கொலை செய்ய திட்டமிட்டோம். 

இதற்காக எனது நண்பரான கோபாலகிருஷ்ணன் (27) உதவியை நாடினேன். தேவராஜன் ரூ.10 லட்சத்திற்கு ஆயுள் காப்பீடு செய்துள்ளார். அவர் இறந்த பின் வரும் பணத்தில், ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்தோம். இதையடுத்து கோபாலகிருஷ்ணன் கூலிப்படை கும்பலை ஏற்பாடு செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, இருவரையும் சிறையில் அடைத்தனர். 
 

click me!