உல்லாசத்துக்கு இடையூறு !! கள்ளக் காதலியின் குழந்தையை கொன்று முட்புதரில் வீசிய கள்ளக் காதலன் !!

Published : May 27, 2019, 10:23 PM IST
உல்லாசத்துக்கு  இடையூறு !!  கள்ளக் காதலியின் குழந்தையை கொன்று  முட்புதரில் வீசிய கள்ளக் காதலன் !!

சுருக்கம்

கோவையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கள்ளக் காதலியின் மூன்று வயது மகளை  கொலை செய்து முட்புதரில் வீசியெறிந்த கள்ளக் காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையை அடுத்த  காரமடை வெளியங்காட்டை சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி  ரூபிணிக்கு ராங் கால் மூலம் தமிழ் செல்வன் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். ராங் காலில் பேசி வந்த இருவரும் நாளடைவில் கள்ளக் காதலர்களாக மாறினர்.

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த இருவரின் உறவு பால்ராஜுக்கு தெரியவர இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.  இதனால் ரூபிணி தனது மூன்று வயது மகள்  தேவிஸ்ரீயை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். 
 
 
இதையடுத்து உறவினர் வீட்டில் வசித்து வந்த ரூபிணியை தன்னுடன் வரும்படி கூறியுள்ளார் தமிழ்செல்வன். இதையடுத்து தனது மகளை கூட்டிக் கொண்டு ரூபிணி, தமிழ்செல்வனுடம் சென்று வாழத் தொடங்கினார்.

ஆனால் ரூபிணியுடன் அவரது மூன்று வயது மகள் தேவி ஸ்ரீ இருப்பதை தமிழ்செல்வன் விரும்பவில்லை. இதைத் தொடர்ந்து பாட்டி வீட்டில் தேவிஸ்ரீயை கொண்டுபோய் விட்டுட்டு வருவதாக அழைத்து சென்ற சில மணி நேரம் கழித்து தனியே வந்த தமிழ்செல்வனிடம் குழந்தையை அழைத்து வந்து தன்னிடம் விடும்படி ரூபிணி அடம் பிடித்திருக்கிறார்.
 
ஆனால் குழந்தையை அழைத்து வருவதாக கூறி சென்ற தமிழ்செல்வன் திரும்ப வரவேயில்லை. இதையடுத்து  ரூபிணி காவல் நிலையத்தில்  இது குறித்து புகார் அளித்துள்ளார். தொடர்ந்து தமிழ்செல்வனையும்,தேவிஸ்ரீயையும் அவர்கள் தேடிவந்தனர். 

அப்போது  தேவிஸ்ரீ  கரட்டிமேடு என்ற இடத்தில் முட்புதரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பாட்டி வீட்டில் விடுவதாக அழைத்து சென்ற தமிழ் செல்வன் சிறுமியை கொலை செய்து முட்புதரில் வீசியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் தமிழ்ச்செல்வனை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்