புருஷனை இழந்த நீ இப்படி செய்யறது தப்புமா! மகளுக்கு அட்வைஸ் செய்த பெற்றோர்.. ஆத்திரத்தில் வாலிபர் செய்த பகீர்.!

By vinoth kumar  |  First Published Aug 15, 2022, 12:54 PM IST

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் உமாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் மகளை கண்டித்தனர். இதனைதொடர்ந்து உமா காளிமுத்துவுடன் உள்ள தொடர்பை துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து உமா வீட்டுக்கு சென்று ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். 


பெற்றோர் எச்சரித்ததையடுத்து கள்ளக்காதலை கைவிட்டு திருந்திவாழ்ந்தார். இதனால் ஆத்திரத்தில் கள்ளக்காதலன் பெண்ணின் பெற்றோரை கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெள்ளையகவுண்டனூர் பச்சலாகவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவரது மனைவி ராணி(54). இவர்கள் மகள் உமா. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உமாவின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தனது பெற்றோருடன் தங்கி மில் வேலைக்கு சென்று மகன்களை படிக்க வைத்தார். அப்போது தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த காளிமுத்து (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிக்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. ஆத்திரத்தில் இருந்த கணவர் என்ன செய்தார் தெரியுமா?

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்த விபரம் உமாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால் அவர்கள் மகளை கண்டித்தனர். இதனைதொடர்ந்து உமா காளிமுத்துவுடன் உள்ள தொடர்பை துண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த காளிமுத்து உமா வீட்டுக்கு சென்று ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராணியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அலறியபடி வீட்டை வீட்டு ஓடினர். 

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தம்பதியை காப்பாற்றினர். காயமடைந்த 2 பேரை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து காளிமுத்துவை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து காளிமுத்து கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க;-  என்ன நிர்வாணமா நிக்க வச்சு நகை போட்டு அழகு பாப்பாரு.. சேகர் சேட்டை குறித்து சுவாதி அதிர்ச்சி தகவல்.!

click me!