சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவி பாலியல் பலாத்கார வழக்கு.. 9 மாதங்களுக்கு பிறகு முன்னாள் மாணவன் கைது.!

By vinoth kumarFirst Published Mar 28, 2022, 11:44 AM IST
Highlights

சென்னை ஐஐடியில்  மேற்கு வங்கத்தை சேர்ந்த  தலித் மாணவி கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தனது பேராசிரியர் புகார் செய்த போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாக்கும்  நோக்கத்தோடும்  இப்பிரச்சனையை அணுகியுள்ளார். 

சென்னை ஐஐடியில் பட்டியலின மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 9 மாதங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர் மேங்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஐடியில் மாணவி பலாத்காரம்

சென்னை ஐஐடியில்  மேற்கு வங்கத்தை சேர்ந்த  தலித் மாணவி கடந்த 2017ம் ஆண்டு தன்னுடன் பயிலும் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தனது பேராசிரியர் புகார் செய்த போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குற்றவாளிகளை பாதுகாக்கும்  நோக்கத்தோடும்  இப்பிரச்சனையை அணுகியுள்ளார். இதனால், மனவேதனையில் இருந்த அந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

மாதர் சங்கம் கண்டம்

இந்நிலையில், 2021ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி மயிலாப்பூர் மகளிர் காவல்நிலையத்தில் மாணவர்கள் கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்ட 8 பேர் மீது புகார் அளித்தார். இதனையடுத்து, 8 பேரும் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் 9 மாதங்களை கடந்தும் மாணவி கொடுத்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டம் தெரிவித்தது.

9 மாதங்களுக்கு பிறகு கைது

இதையடுத்து கடந்த 22ம் தேதி பாதிக்கப்பட்ட மாணவியும் மாதர் சங்கத்தினரும் மகளிர் ஆணையத் தலைவரை சந்தித்து புகார் அளித்ததுடன் இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, மயிலாப்பூர் காவல் துணை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மேற்கு வங்கம் விரைந்தனர்.  இந்நிலையில், மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஐஐடி முன்னாள் மாணவர் கிங்ஷீக்தேவ் ஷர்மாவை தனிப்படை போலீசார் கொல்கத்தாவில் கைது செய்துள்ளதாகவும், மற்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!