அடி தூள்... போதையில் டர்க்கியானால் கோழிக்கறி விருந்து..!! கிராமமே கொண்டாடி மகிழும், செல்ல தயாரா..??

By Ezhilarasan BabuFirst Published Oct 19, 2019, 9:25 AM IST
Highlights

அதையும் மீறி மது அருந்தினால் அபராதமாக 2000 ரூபாய் வரி செலுத்த வேண்டும்,  அத்துடன் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு இணையாக சுமார் 800 பேருக்கு கோழி கறி விருந்து அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் குடிபோதையில் ஆண்களால் ஏற்படும் சச்சரவுகள் அதிகமாகிக் கொண்டே இருந்தது, எனவே அதை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2013- 2014 ஆண்டில் கிராமத்தில் இந்த புதிய நடைமுறை ஒன்று கொண்டு வரப்பட்டது . 

குடிபோதையில் ஒருவர் பிடிபட்டால் அவர் அந்தக் கிராமத்திற்கே கறி விருந்து சமைத்து போட வேண்டுமென்ற வினோதமான கட்டுப்பாடு இந்தியாவில் உள்ள ஒர் மாநிலத்தில் கடைபிடிக்கப் பட்டு வரும் தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகிய சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டம் கட்டிசிட்டாரா என்ற பழங்குடி கிராமத்தில்தான் இந்த கட்டுப்பாடு.  குஜராத் மாநிலம் முழுவதும் மதுவிலக்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது ஆனால் அதையும் மீறி சிலர் மது அருந்துவது  வாடிக்கையாக இருந்து வருகிறது, இந்த நிலையில் இதை கட்டுப்படுத்த இந்த பழங்குடி கிராம வாசிகள் யோசித்தனர். அப்போது அந்த கிராமத்துப் பெண்கள் கொடுத்த ஆலோசனையின்படி கிராம பஞ்சாயத்தில் புதிய கட்டுப்பாடு  ஒன்று நடைமுறைக்கு வந்தது, அதுதான் இந்த கோழிக்கறி விருந்து பனிஷ்மென்ட் .

அந்த கிராமத்தில் அதையும் மீறி மது அருந்தினால் அபராதமாக 2000 ரூபாய் வரி செலுத்த வேண்டும்,  அத்துடன் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு இணையாக சுமார் 800 பேருக்கு கோழி கறி விருந்து அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுகுறித்து அக்கிராம மக்கள் கூறுகையில் குடிபோதையில் ஆண்களால் ஏற்படும் சச்சரவுகள் அதிகமாகிக் கொண்டே இருந்தது, எனவே அதை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 2013- 2014 ஆண்டில் கிராமத்தில் இந்த புதிய நடைமுறை ஒன்று கொண்டு வரப்பட்டது .  குடிபோதையில் யாராவது தகராறு செய்தால் 2000 அபராதமும், முரட்டுத்தனமாக தாக்குதலில் ஈடுபட்டால் 5ஆயிரம் அபராதத் தொகையுடன் கிராமத்தில் உள்ள 700 முதல் 800 பேருக்கு கோழிக் கறி விருந்து அளிக்க வேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டு அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

  

இத்தகைய தண்டனையால் பெருமளவில் சச்சரவுகளும் சண்டைகளும் குறைந்துள்ளது இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது முதல் அதிகபட்சமாக மூன்று நான்கு பேர் மட்டுமே விதிமீறி அதற்கு  தண்டனையாக கறி விருந்து சமைத்து போட்டுள்ளனர் என கிராமமக்கள் சிரித்தபடி தகவல் சொல்கின்றனர்.  அதுவும் படிப்படியாக குறைந்து தற்போது ஒருவர் கூட இந்த பழங்குடி கிராமத்தில் மது அருந்துவதில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

click me!