இந்த படத்துல இருக்கிற மாதிரியே பண்ணணும்.. இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி வயாகரா போட்டு கணவர் டார்ச்சர்

Published : Mar 03, 2023, 02:33 PM ISTUpdated : Mar 04, 2023, 06:27 AM IST
இந்த படத்துல இருக்கிற மாதிரியே பண்ணணும்.. இயற்கைக்கு மாறாக உறவு இருக்க சொல்லி வயாகரா போட்டு கணவர் டார்ச்சர்

சுருக்கம்

கஞ்சா இல்லாமல் அவரால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை. கஞ்சாவுடன் வயாகரா மாத்திரையும் உட்கொண்டு இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்வது கண்டு அந்த பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார். 

கஞ்சா போதையில் இயற்கைக்கு மாறாக உறவு செய்ய சொல்லி சித்ரவதை செய்த கணவர் மீது கோவை பட்டதாரி பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

கோவையைச் சேர்ந்த 25 வயது பட்டதாரி பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவனத்தை நடத்தி வரும் வாலிபருக்கும் கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை வீட்டாருக்கு சீதனமாக 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர்.

திருமணம் நடந்த சில நாட்களுக்கு பிறகு தான் கணவருக்கு கஞ்சா புகைக்கும் பழக்கம் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த வாலிபர் பெற்றோரிடம் கூறிய போது இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அப்போது தான் தெரிந்தது மகனுக்கு கஞ்சா பழக்கம் இருப்பது பெற்றோருக்கு தெரியும் என்பது. மேலும், கஞ்சா இல்லாமல் அவரால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியவில்லை. கஞ்சாவுடன் வயாகரா மாத்திரையும் உட்கொண்டு இயற்கைக்கு மாறான முறையில் உறவு கொள்வது கண்டு அந்த பெண் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினார். 

இந்நிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பீளமேடு அருகே நண்பரின் இடத்திற்கு மனைவியை கணவர் அழைத்து சென்றுள்ளார். அப்போது, தனது செல்போனில் இருந்த ஆபாச வீடியோவை காண்பித்து இதே போல் மூன்று பேர் சேர்ந்து உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார். அப்படி இல்லை என்றால் அந்தரங்க போட்டோக்களை வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் ஒருவழியாக அங்கிருந்து தப்பித்து தாய் வீட்டுக்கு வந்து விட்டார். பாதிக்கப்பட்ட பெண், மகிளா நீதிமன்றத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் கொடுத்த புகாரில் போலீஸ் நடவடிக்கை எடுக்காததன் காரணமாகவே பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி