மூன்றாவது கணவனின் நண்பருடன் தகாத உறவு... கணவன் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்த நண்பன்!! பட்டப்பகலில் பயங்கர சம்பவம்... விசாரணையில் திடுக்

Published : Aug 19, 2019, 02:03 PM IST
மூன்றாவது கணவனின் நண்பருடன் தகாத உறவு... கணவன் இல்லாத நேரம் பார்த்து வீடு புகுந்த நண்பன்!! பட்டப்பகலில் பயங்கர சம்பவம்... விசாரணையில் திடுக்

சுருக்கம்

உடுமலையில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வீட்டிற்கு சென்றபோது அந்த பெண் பேசாததால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

உடுமலையில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். வீட்டிற்கு சென்றபோது அந்த பெண் பேசாததால் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

உடுமலையை அடுத்துள்ள ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பழனிச்சாமி, இவருடைய மனைவி சுமதி, பழனிச்சாமி இறந்து விட்டதால் சுமதியை கரூரை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு 2-வதாக திருமணம் செய்து கொடுத்தனர் அவருடைய பெற்றோர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் மணிகண்டனுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே தகாத தொடர்பு இருந்ததால், மனம் உடைந்துபோன சுமதி தனது 2-வது கணவர் மணிகண்டனை பிரிந்து, குழந்தையை தூக்கிக்கொண்டு உடுமலை ஜெ.ஜெ.நகரில் உள்ள தாய் மல்லிகா வீட்டிற்கு வந்து விட்டார். இந்த சூழலில் வாழ்க்கை துணையின்றி தவித்த சுமதி அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான திருமலைச் சாமி என்பவரை காதலித்து மூன்றாவதாக கல்யாணம் செய்து கொண்டார். 

இந்த கல்யாணத்திற்கு பின்னர் திருமலைச்சாமியும், இவருடைய உறவினர் கணேஷ் என்பவரும் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர். இதையடுத்து தனது நண்பன் திருமலைச்சாமி வீட்டிற்கு கணேஷ் அடிக்கடி வந்து போவதுமாக இருந்துள்ளார். இதனால் கணேசுக்கும், சுமதிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. 

சுமதியை உயிருக்கு உயிராக காதலித்த கணேஷ் சுமதிக்கு செல்போன் ஒன்றை வாங்கிக்கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான இந்த தகாத பழக்க வழக்கம் சுமதியின் சொந்தக்காரர்களுக்கு தெரிய வர கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சுமதியிடம் இருந்த செல்போனை வாங்கி கணேசிடம் கொடுத்துவிட்டு இனிமேல் கணேசிடம், பேசவோ, பழகவோ கூடாது என்று சுமதியை திட்டியுள்ளார். அதன்பின் கணேசுடன் சுமதி பேசவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை திருமலைச் சாமி வேலைக்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் சுமதி இருந்துள்ளார். அப்போது சுமதியின் வீட்டிற்கு வந்த கணவரின் நண்பன் கணேசிடம் சுமதி பேசவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் அரிவாளால் சுமதியின் கழுத்தில் கொடூரமாக வெட்டியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் சுமதி பரிதாபமாக ரத்தவெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசில் திருமலைச்சாமி புகார் செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர்கள்  சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்று சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் கான அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

புதுச்சேரியில் சிறுமையை சீரழித்த 2 கிரிக்கெட் வீரர்கள்..! ரூமில் பாலியல் சேட்டை..! விரட்டியடித்த ஹோட்டல் நிர்வாகம்
சென்னையில் பேரதிர்ச்சி! பீகார் இளைஞரின் குடும்பத்தையே கருவறுத்த கொடூர கும்பல்..