அக்காவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததது ஏன்..? போலீசாரிடம் காதல் மனைவி பரபரப்பு வாக்குமூலம்..!

Published : May 10, 2019, 04:04 PM IST
அக்காவுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததது ஏன்..? போலீசாரிடம் காதல் மனைவி பரபரப்பு வாக்குமூலம்..!

சுருக்கம்

புதுச்சேரியில் லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக காதல் மனைவி மற்றும் அவரது அக்காவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரியில் லாரி ஓட்டுநர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பாக காதல் மனைவி மற்றும் அவரது அக்காவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

புதுச்சேரி முதலியார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் கடந்த 6-ம் தேதி சாக்குமூட்டையில் கட்டிய நிலையில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலம் கிடந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் தொடர்பாக விசாரித்த போது புதுச்சேரி நெல்லித்தோப்பு கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கமலக்கண்ணன் என்பதும்,  இவருக்கு காதல் மனைவி ஸ்டெல்லா, 3 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில் கமலக்கண்ணன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளது அம்பலமானது.

 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கமலக்கண்ணனின் காதல் மனைவி ஸ்டெல்லா என்பவர் கணவரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் எனக்கும், எனது கணவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எனது கணவருக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கிடந்தார். இதனால் செல்போனில் நான் யாரிடம் பேசினாலும் சந்தேகப்பட்டு அடித்து சித்ரவதை செய்து வந்தார். அதனால் கோபித்துக்கொண்டு அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டேன். மீண்டும் அக்காவீட்டிற்கு வந்து என்னை துன்புறுத்தியதால், அக்காவுடன் சேர்ந்து  நான் எனது கணவரை கொலை திட்டமிட்டோம். 

இந்நிலையில் அக்கா ரெஜினாவின் வீட்டில் வைத்து எனது கணவருக்கு பழச்சாறில் வி‌ஷம் கலந்து கொடுத்ததாகவும், மயங்கி விழுந்த அவரை பெரியார் நகரில் உள்ள எங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்து அடைத்து வைத்தும் அவர் இறக்கவில்லை என்று அக்கா ரெஜினாவிடம் கூறியுள்ளார். அக்கா அவரது ஆண் நண்பரான ரவுடி தமிழ்மணியை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்ததாகவும் கூறிய ஸ்டெல்லா, பின்னர் வீட்டில் வைத்து நானும் அக்கா, ரவுடி தமிழ்மணியும் சேர்ந்து கழுத்து நெரித்து கொலை செய்ததாக கூறினார். 

இதனையடுத்து 5-ம் தேதி  நள்ளிரவு தமிழ்மணி அவரது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து கணவரின் உடலை சாக்குமூட்டையில் கட்டி ஸ்கூட்டரில் கொண்டு சென்று போக்குவரத்து அலுவலகம் எதிரே உள்ள கழிவுநீர் வாய்க்காலில் வீசி உள்ளார். அதன் பின் ஸ்டெல்லா அவரது அக்கா வீட்டிற்குச் சென்றுவிட்டேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் கொலைக்கு உடந்தையாக இருந்து தலைமறைவான ஸ்டெல்லாவின் சகோதரி ரெஜினா, ரவுடி தமிழ்மணி, அவரது கூட்டாளிகள் உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்