நடத்தையில் சந்தேகம்... வெளிநாடு சென்று திரும்பியதும் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்...!

Published : Mar 16, 2019, 04:00 PM ISTUpdated : Mar 16, 2019, 04:24 PM IST
நடத்தையில் சந்தேகம்... வெளிநாடு சென்று திரும்பியதும் மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்...!

சுருக்கம்

திருச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவனே மனைவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவனே மனைவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வடக்கு ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசந்தர் (வயது 40). இவரது மனைவி மகாலட்சுமி (36). மகாலட்சுமி -பாலசந்தர் இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாலசந்தர் சிங்கப்பூரில் பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். 

சிங்கப்பூரில் பணியாற்றி வந்த போது, பாலசந்தர் அவரது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார். ஊருக்கு திரும்பியதும் அந்த பணத்தை எங்கே என்று மனைவியிடம் கேட்டுள்ளார். சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் நேற்றிரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாலசந்தர், இன்று அதிகாலை தூங்கி கொண்டிருந்த மகாலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையம் சென்று சரணடைந்தார்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் மண்ணச்சநல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுக நிர்வாகி குடும்பத்துடன் எரித்து கொலை.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
வருஷத்தின் முதல் நாளிலேயே பதற வைக்கும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் ட்ரோனை அனுப்பிய அட்டூழியம்..!