கல்யாணமான நான்கே மாதத்தில் மனைவியை கொடூரமாக குத்திக் கிழித்த கணவன்... ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்த சோகம்!!

Published : Jun 18, 2019, 04:39 PM IST
கல்யாணமான நான்கே மாதத்தில் மனைவியை கொடூரமாக குத்திக் கிழித்த கணவன்... ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்த சோகம்!!

சுருக்கம்

வேலைக்கு செல்லாமல் கல்யாணம் ஆனதிலிருந்து, வரதட்சணையாக வந்த மனைவியின் நகையை அடகு வைத்து குடும்பம் நடத்திய கணவனை திட்டியதால், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கழுத்தறுத்துக் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

வேலைக்கு செல்லாமல் கல்யாணம் ஆனதிலிருந்து, வரதட்சணையாக வந்த மனைவியின் நகையை அடகு வைத்து குடும்பம் நடத்திய கணவனை திட்டியதால், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவர் கழுத்தறுத்துக் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சத்திரபட்டியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் சண்முகப்பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் கல்யாணம் ஆன சில மாதங்கள் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.மாரியப்பன் சரியாக வேலைக்கு செல்லாமல் வரதட்சணையாக மனைவிக்கு போட்ட நகையை அடகு வைத்தும், விற்று அதில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

இப்படியே நான்கு மாதங்கள் ஓடிய நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்னும், எவ்வளவு நாட்கள் தான் இப்படி வேலைக்கு போகாமல் குடும்பம் நடத்துவது? இப்படியே இருந்தால் நம்ம நிலைமை என்ன ஆவது? என  நேற்றிரவும் இது தொடர்பாக கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி சண்முகப்பிரியாவை தனது கணவர் அசிங்க அசிங்கமாக திட்டியிருக்கிறார் இதனால் கோபம் அடைந்த சண்முகப்பிரியா கத்தியை எடுத்து குத்தியதில் கணவரின் கையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

அந்த கத்தியை பிடிங்கிய மாரியப்பன் மனைவியை மார்பகம், வயிறு பகுதிதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் நிலைகுலைந்து போன மனைவி ரத்தவெள்ளைத்தில் விழுந்த இடத்திலேயே  உயிரிழந்து விட, பயந்து போன கணவரும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்துள்ளனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவர் கண்முழித்தால் மட்டுமே எதற்காக, இந்த கொலையை செய்தார் என்பது ஹெரியவரும்.

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்