பொள்ளாச்சியில் பயங்கரம்... காதல் மனைவியை 17 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த கணவன் கைது

By Ganesh A  |  First Published Sep 18, 2023, 9:59 AM IST

பொள்ளாச்சியில் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த மனைவியை கணவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பொள்ளாச்சி அருகே தொப்பம்பட்டி புதுக்காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (34), பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி கற்பகம் (33). இவர்கள் இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஆறுமுகத்துக்கும், கற்பகத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 

இதையடுத்து ஆறுமுகம் தனது மனைவியை பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் கடந்த சில வாரமாக ஆறுமுகம் பொள்ளாச்சி பகுதியில் பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்தவர், கடந்த ஒரு வாரமாக, தொப்பம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, கற்பகத்திடம் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஆறுமுகம் தெரிவித்துள்ளார். இதற்கு கற்பகம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு தொப்பம்பட்டியில் உள்ள தனது மனைவி கற்பகத்தின் வீட்டிற்கு ஆறுமுகம் சென்றுள்ளார். அப்போதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள காலி இடத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கத்தியால் கற்பகத்தின் வயிற்றுப் பகுதி, கழுத்து பகுதி என 17 இடங்களில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் கற்பகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மகாலிங்கபுரம் போலீஸார் கற்பகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பேரில் பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் பிருந்தா அறிவுறுத்தலின்படி காவல் ஆய்வாளர் வெங்கடேஷ் தலைமையில் பல்லடத்தில் பதுங்கி இருந்த ஆறுமுகத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!