ஜாதி விட்டு ஜாதி திருமணம்… பெற்ற மகளையும், மருமகனையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய தந்தை… உயிருக்கு போராடும் தம்பதிகள் !!

Published : Sep 20, 2018, 06:54 AM IST
ஜாதி விட்டு ஜாதி திருமணம்… பெற்ற மகளையும், மருமகனையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிய தந்தை… உயிருக்கு போராடும் தம்பதிகள் !!

சுருக்கம்

தெலங்கானாவில் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை நடு ரோடில் வைத்து, மகளையும், மருமகனையும் சரமாரியாக வெட்டியதில் அவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் அண்மையில் ஒரு ஆணவக் கொலை நடைபெற்ற நிலையில் மற்றொரு காதல் தம்பதியினரை மகளின் தந்தை வெட்டினார். இதன் மூலம் மற்றொர ஆணவகொலை முயற்சி நடந்துள்ளது அம்மாநில மக்களை மிரள வைத்துள்ளது.

சில நாட்களுக்கு  முன்பு தெலுங்கானா மாநிலத்தின், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த, தலித் இன்ஜினியரிங் பட்டதாரி, பிரணய் குமார் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபர், மாருதி ராவின் மகள், அம்ருதவர்ஷினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறியும்  அவர்கள்  ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கர்ப்பிணியான தனது மனைவியை பிரணய் குமார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மர்ம நபர் ஒருவர் கொலை செய்துவிட்டு , தப்பிச் சென்றான். கொலைக்கு தன் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாக, அம்ருதவர்ஷினி, போலீசாரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில்,இதே போன்று மற்றொரு சம்பவம் தெலங்கானாவில் நடைபெற்றுள்ளது. ஐதராபாதில், வசித்து வரும்  சந்தீப் மற்றும் மாதவி இருவரும்  வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இதற்கு, மாதவியின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இந்நிலையில் நேற்று மாலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வந்த மாதவி மற்றும் சந்தீப்பை, மாதவியின் தந்தை அரிவாளால் ஓட ஓட சரமாரியா வெட்டினார்.

இதில், இருவரும் படுகாயமடைந்தனர். சந்தீப்பின் முகத்தில் ஆழமான வெட்டு காயம் ஏற்பட்டுளளது. மாதவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து ஒரே வாரத்தில் தெலங்கானாவில் ஆணவப் படுகொலை மற்றும் கொலை முயற்சி போன்றவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்