பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை.. 14 ஆண்டுகளாக இதே பொழப்பாக செய்து வந்த ஆசிரியர் கைது.!

By vinoth kumar  |  First Published Mar 24, 2022, 10:58 AM IST

 14 ஆண்டுகளாக இந்த பள்ளியில் உள்ள 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் சில மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.


ராணிப்பேட்டை அருகே பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

அரசினர் குழந்தைகள் பள்ளி இல்லம்

Tap to resize

Latest Videos

undefined

ராணிப்பேட்டை மாவட்டம்  நவல்பூர் காரை கூட்ரோடு பகுதியில் செயல்பட்டு வரும், அரசு சமூக நல பாதுகாப்பு துறை சார்பில் நடத்தப்படும் சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் பள்ளி இல்லம் உள்ளது. இங்கே சிறுவர்கள் முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்கிப் படித்து வருகின்றனர். இதில், பல்வேறு துறை சார்ந்த ஆண் பெண் என இருபாலரும் கொண்ட ஆசிரியர்கள் இந்த பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். 

கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கை

குறிப்பாக இப்பள்ளியில் அதிக மாணவர்கள் விடுதியில் தான் தங்கியுள்ளனர். இந்த பள்ளியில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கிராமத்தைச் சேர்ந்த  செந்தில்குமார்(46) உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

கடந்த 14 ஆண்டுகளாக இந்த பள்ளியில் உள்ள 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் சில மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

போச்சோவில் கைது

இந்நிலையில், பள்ளி மாணவர்கள், பள்ளி காப்பாளர் விஜயகுமாரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர். மாணவர்களின் நலனைக் கருதி காப்பாளர் விஜயகுமார் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இதனையடுத்து, உடற்கல்வி ஆசிரியர்  செந்தில்குமாரை போச்சோவில் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

click me!