நடுரோட்டில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை.. போலீஸ்காரருக்கு சரமாரி அடிஉதை... மண்டை உடைப்பு

Published : Dec 08, 2020, 04:50 PM IST
நடுரோட்டில் இளம்பெண்ணின் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை.. போலீஸ்காரருக்கு சரமாரி அடிஉதை... மண்டை உடைப்பு

சுருக்கம்

வடபழனியில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் மது போதையில் பாலியல் தொந்தரவு  கொடுத்த போலீஸ்காருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

வடபழனியில் பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் மது போதையில் பாலியல் தொந்தரவு  கொடுத்த போலீஸ்காருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.

வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் வேலை முடிந்ததும், வீட்டிற்கு செல்வதற்காக வடபழனி 100 அடி சாலையில் உள்ள நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.

அப்போது, மது அருந்திவிட்டு, சீருடையில் இருசக்கர வாகனத்தில் வந்த போலீஸ்காரர் ஒருவர், பேருந்துக்காக காத்திருந்த  இளம்பெண்ணிடம் பேருந்து வருவதற்கு நேரமாகும். என்னுடன் பைக்கில் வா. நீ எங்கு செல்ல வேண்டுமோ அங்கு அழைத்து செல்கிறேன் என கூறியுள்ளார். அதற்கு  அந்த பெண் நீங்கள் யார் என்றே எனக்கு தெரியாது. நான் எப்படி உங்களுடன் பைக்கில் வர முடியும் என்றார். பின்னர், அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துள்ளார். 

இதனால், அந்த பெண்அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் அந்த போலீஸ்காரரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்த போலீஸ்காரரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியை சேரந்த  ராஜு (39) என்பதும், இவர் எம்ஜிஆர் நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து, அப்பெண் கொத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்