200 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து உல்லாச வாழ்க்கை அனுபவித்த இளைஞர்கள்... எகிறும் கிரைம் ரேட்!!

Published : Mar 03, 2019, 09:44 PM ISTUpdated : Mar 03, 2019, 09:54 PM IST
200 பெண்களை ஆபாச வீடியோ எடுத்து உல்லாச வாழ்க்கை அனுபவித்த இளைஞர்கள்...  எகிறும் கிரைம் ரேட்!!

சுருக்கம்

இளம் பெண்களிடம்  சமூகவலைத்தளங்களில்  நண்பர்களாகப்  பழகி, நேரில் வர வழைத்து கடத்தி பாலியல் தொந்தரவு செய்த நண்பர்களை கைது செய்து விசாரித்ததில் பல திடுக் தகவல்கள் கிடைத்துள்ளது. 

பொள்ளாச்சியில் தனியார் கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படித்து வரும் ரிஷ்வந்த் , அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக் இல் நண்பராகப் பழகி வந்துள்ளான் ரிஷ்வந்த் கடந்த வாரம் அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளான் ரிஷ்வந்த். கடந்த 12 ஆம் தேதி அப்பெண்ணை ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காகக் காத்திருக்குமாறு அவன் தெரிவித்துள்ளான். வசந்தகுமார், சதீஸ், திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த ரிஷ்வந்த், மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.

 நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்து விட்டு,  எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களைக் காட்டி செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார்களாம். புகைப்படத்தை மாணவியிடம் காட்டி பாலியல் உறவுக்கு இணங்குமாறும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர். காரில் சத்தம் போட்டதால் மாணவியை பெரியாக்கவுண்டனூர் அருகே இறக்கி விட்டு,  நகையை பறித்துக் கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும், அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர். தாங்கள் சொல்வதைச் செய்ய மறுத்தால் மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்அப்லோடு செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். 

இவர்கள் தொடர்ந்து  கொடுத்துவந்த செக்ஸ் மிரட்டலைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய காவல்துறை, மூவரையும் ஒன்றாகப் பிடிக்கத் திட்டமிட்டுக் காத்திருந்து, ரிஷ்வந்த், வசந்த், சதீஸ்ஆகிய மூவரையும்  கருடன் கைது செய்துள்ளனர், தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைத் தேடி வருகின்றனர். 

கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களில் காத்திருந்தது பெரிய ஷாக்,  ஆமாம் இளம் பெண்கள், கல்யாணமான இல்லத்தரசிகள் என  200 க்கும் மேற்பட்ட பெண்களின் வீடியோகள் கைப்பற்றப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கு செல்லும்  பெண்கள், பள்ளிக்கு செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என இந்த பாரபட்சம் பார்க்காமல் மிரட்டி பணம் சம்பாதித்தும் சில பெண்களை உல்லாசம் அனுபவித்தும் வந்துள்ளது தெரியவந்துள்ளது. 

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக  பணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்களை மட்டும் இந்த கும்பல் குறிவைத்து மிரட்டி வந்துள்ளதும் விசாரணையில்  மயக்கம் வர வைத்துள்ளது. இவர்கள் ஃபேஸ்புக் மூலம் பழகி,  காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கி வந்துள்ளனர்.  மேலும், தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைக் பிடித்தால் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்  என்பதால். திருநாவுக்கரசை காவல்துறை  தனிப்படை அமைத்து தேடி வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!