கல்லூரி மாணவியை கதற, கதற கற்பழித்த அரசு ஊழியர் ! ஆபாச படமெடுத்து மிரட்டல் !!

Published : Oct 04, 2019, 08:24 PM IST
கல்லூரி மாணவியை கதற, கதற கற்பழித்த அரசு ஊழியர் ! ஆபாச படமெடுத்து மிரட்டல் !!

சுருக்கம்

திருவனந்தபுரம் அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கின் விசாரணையில் கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து கற்பழித்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

திருவனந்தபுரத்தை அடுத்த அம்பலத்தரா, கோவில் விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ். இவர் கேரள பொதுப்பணித்துறையில் மனோஜ், பணிபுரிந்து வருகிறார். அரசு வேலையில் சேரும் முன்பு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் முதல்வராக இருந்தார்.

இவரது மனைவி அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மனைவியின் உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். மனைவியின் தற்கொலைக்கு மனோஜ் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் புகாரில் கூறி இருந்தனர்.

உறவினர்கள் கொடுத்த புகார் தொடர்பாக போலீசார் மனோஜை அழைத்து விசாரித்தனர். அவரது செல்போன் அழைப்புகளையும், அதில் பதிவாகி இருந்த குறுந்தகவல்களையும் பார்வையிட்டனர்.

இதற்காக சைபர் கிரைம் போலீசார் மனோஜின் செல்போன் தகவல்களை பரிசோதித்தபோது அதில், ஏராளமான ஆபாச படங்கள் இருந்தது. மேலும் பல கல்லூரி மாணவிகளுடன் மனோஜ் இருக்கும் படங்களும் காணப்பட்டன.


செல்போனில் இருந்த ஆபாச படங்கள் பற்றி போலீசார் மனோஜிடம் விசாரித்தனர். இதில், அவர் கல்லூரி முதல்வராக இருந்த போது கல்லூரியில் படித்த சில மாணவிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்தது தெரிய வந்தது.

மேலும் அந்த படங்களை காட்டி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து படத்தில் இருந்த மாணவிகள் சிலரிடம் போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.

இதில், மனோஜ் மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. மனோஜ், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்தது அவரது மனைவிக்கு தெரிய வந்துள்ளது.

மனோஜின் செல்போனில் இருந்த படங்கள் மூலம் அதனை உறுதி செய்த மனைவி மனம் உடைந்து தற்கொலை செய்துள்ளார். போலீஸ் விசாரணையில், இந்த விவரங்கள் தெரிய வந்ததை தொடர்ந்து போலீசார் மனோஜை கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

ரூமில் கள்ளக்காதலனுடன் மனைவி.. பார்க்க கூடாததை பார்த்த கணவர்.. குழந்தை வாக்குமூலத்தில் வெளிவந்த பகீர் உண்மை!
இன்ஸ்பெக்டர் வீட்டில் குளித்த கல்லூரி மாணவி.. வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த போலீஸ்காரர்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்