பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திடீர் திருப்பம்..! உயர் நீதிமன்றம் இப்படி ஒரு உத்தரவு..!

By ezhil mozhiFirst Published Nov 1, 2019, 4:20 PM IST
Highlights

கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை சொகுசு பங்களாவுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து  ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருநாவுக்கரசு மட்டும் சபரிராஜன் இருவரையும் முக்கிய குற்றவாளியாக கருதி வழக்கு தொடுக்கப்பட்டது. 

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திடீர் திருப்பம்..! உயர் நீதிமன்றம் இப்படி ஒரு உத்தரவு..!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகிய இருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி அவர்களை சொகுசு பங்களாவுக்கு அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து  ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருநாவுக்கரசு மட்டும் சபரிராஜன் இருவரையும் முக்கிய குற்றவாளியாக கருதி வழக்கு தொடுக்கப்பட்டது. பின்னர் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகிய 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவுக்கு இந்த இரண்டு பேரின் தாயார் தொடுத்த வழக்கில் தங்களது மகன்களை சிறையில் அடைத்தது தொடர்பாக முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இது தொடர்பான விசாரணை இன்று நீதிபதி சுந்தரேஷ், டீக்கா ராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணையில் குண்டர் சட்டத்தில் அடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பாக முறையான ஆவணங்கள் உறவினர்களுக்கு வழங்கவில்லை என்பது நிரூபணமானது தொடர்ந்து, குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கும் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம் என்பது குறிப்பிடத்க்கது

click me!