ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டியதால் அதிர்ச்சி..!

By vinoth kumar  |  First Published Jul 8, 2023, 7:58 AM IST

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலுங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. 


17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள இலுங்கிப்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. அதே ஊரை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இந்த சிறுமி வெளியூரில் வேலை பார்த்து வந்துள்ளார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;-  650 கி.மீ தூரம்! கண்களை கட்டி உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய மாணவி! காதலன் செய்த பகீர் சம்பவம்! வெளியான தகவல்.!

இந்நிலையில், கோயில் திருவிழாவிற்காக வெளியூரில் இருந்து சிறுமி ஊருக்கு வந்துள்ளார். அப்போது, என்னுடன் திருவிழா பார்க்க சேர்ந்து வரமாட்டாயா? கூறி சிறுமியை திருவிழாவிற்கு அழைத்து சென்றார். பின்னர்,  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதையும் படிங்க;-  மசாஜ் சென்டர் என்ற பெயரில் மஜாவாக நடந்த விபச்சாரம்! 14 பெண்கள்! 32 ஆண்கள்! உல்லாசம்?

இதேபோன்று சிறுமியை பலமுறை  பலாத்காரம் செய்துள்ளார். அதன் பின்னர் சிறுமி போன் செய்தாலும் எடுக்காமல் தவிர்த்து வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி நடந்த சம்பவத்தை தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து ராமமூர்த்தி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர். 

click me!