திருமணமான 17 நாளில் இளம் பெண் பரிதாப முடிவு... வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சோகம்!!

Published : Jun 26, 2019, 05:58 PM IST
திருமணமான 17 நாளில் இளம் பெண் பரிதாப முடிவு... வாணியம்பாடி அருகே நிகழ்ந்த சோகம்!!

சுருக்கம்

வாணியம்பாடி அருகே கல்யாணமான 17 நாளில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாணியம்பாடியை அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரவி மகள் தீபிகா என்ற என்ஜினீயரான இவருக்கும், வாணியம்பாடியை சேர்ந்த நவீன்குமாருக்கும் கடந்த 6-ந் தேதி திருமணம் நடந்தது. நவீன்குமார் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அசிஸ்டன்ட் மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கணவர் வீட்டில் சில நாட்கள் வசித்த தீபிகா கடந்த 2 தினங்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு திரும்பினார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார். அப்போது வெளியில் சென்ற அவரது அப்பா அப்பா வீடு திரும்பிய போது தீபிகா தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.  அக்கம் பக்கத்தினரும் அங்கு வரவே அவர்கள் உதவியுடன் தூக்கிலிருந்து கீழே இறக்கி அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்தபோது தீபிகா ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி வெறும் 17 நாட்களிலேயே தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கான காரணம்  தெரியவில்லை. கல்யாணமான சில நாட்களிலேயே இளம் பெண் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என  வேலூர் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். அவரது விசாரணைக்கு பின்னரே தீபிகா தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்